ராக்கி சாவந்த் தந்து முன்னாள் கணவர் ரிதேஷை விவாகரத்து செய்தபிறகு தன்னை விட 5 வயது சிறிவரான ஆதில் கான் துரானி எனும் மைசூரை சேர்ந்த தொழிலதிபரை காதலித்து வந்தார். கடந்த ஆண்டிலேயே தங்களுக்கு திருமணம் முடிந்ததாக ஜனவரி மாதம் அவர்களது திருமண படங்களையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்தார். இதற்காக இஸ்லாம் மதத்திற்கு மாறியதாகவும் கூறினார்.
திருமணம் ஆன கொஞ்ச நாளிலேயே ஆதில் கான் துரானி தன்னை துன்புறுத்துவதாகவும், மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளதாக போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து தாக்குதல், ஏமாற்றுதல் மற்றும் திருமணத்திற்கு புறம்பான உறவு ஆகியவற்றுக்காக ஓஷிவாரா காவல்துறை அவரை கைது செய்து 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்துள்ளது.
2018 ஆம் ஆண்டு வி.வி.புரத்தில் உணவகம் நடத்தி வந்த ஆதில்கானுடன் இரானிய பெண்ணிற்கு நட்பு ஏற்பட்டது. விரைவில், இருவரும் நெருக்கமாகி அதில் அவளை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதனை அடுத்து இருவரும் மூன்று வருடங்களாக யாதவகிரியில் உள்ள ஒரு குடியிருப்பில் ஒன்றாக வாழ்ந்துவந்ததாக அந்தப் பெண் கூறினார்.
சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு, அந்த பெண் திருமணத்திற்கு வற்புறுத்தியபோது, அதை மறுத்து நடந்ததை வெளியில் சொன்னால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதாகவும்,
தனது அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்றும், தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினால் ஈரானில் உள்ள பெற்றோருக்கு அனுப்பி விடுவேன் என்றும் மிரட்டியதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்