ரசிகர்களுக்கான அடுத்த அப்டேட்: தொடங்கியது ரஜினியின் தர்பார்!
முதற்கட்ட தயாரிப்புப் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வந்தது. இதைதொடர்ந்து, இன்று முதல் மும்பையில் படப்பிடிப்பு தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படத்தில் பூஜை நடைபெற்றுள்ளது.
ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் தர்பார் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
2/ 8
பேட்ட படத்தைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 167-வது படமான தர்பார் படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார்.
3/ 8
இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை, நேற்று காலை 8.30 மணிக்கு வெளியிட்டுள்ளது, பட தயாரிப்பு நிறுவனமான லைகா.
4/ 8
மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனும் ஒப்பந்தமாகியுள்ளனர்.
5/ 8
தற்போது வரை படத்தின் நாயகியாக நயன்தாரா மட்டுமே தேர்வாகியுள்ளார்.
6/ 8
இந்நிலையில் முதற்கட்ட தயாரிப்புப் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வந்தது. இன்று முதல் மும்பையில் படப்பிடிப்பு தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.
7/ 8
இந்தப் பூஜையில் நடிகர் ரஜினிகாந்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.
8/ 8
இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது. ஏ.ஆர்.முருகதாஸ் - ரஜினிகாந்துடன் முதன்முறையாக இணைவதால், படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.