#44YrsOfUnmatchableRAJINISM என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்துள்ளனர் ரஜினி ரசிகர்கள்
News18 Tamil | August 18, 2019, 11:55 AM IST
1/ 16
ரஜினி சினிமாத்துறைக்கு வந்து இன்றுடன் 44 வருடங்களான நிலையில் அதை கொண்டாடும் விதமாக ரஜினி ரசிகர்கள் #44YrsOfUnmatchableRAJINISM என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்துள்ளனர்.
2/ 16
#44YrsOfUnmatchableRAJINISM என்ற ஹேஷ்டேக்கை இயக்குநர் அருண்ராஜா காமராஜா ரிலீஸ் செய்தார்.
3/ 16
டிசம்பர் 12 -ம் தேதி 1950-ம் ஆண்டு பெங்களூருவில் பிறந்தவர் ரஜினிகாந்த். இவருடைய இயற்பெயர் சிவாஜி ராவ்
4/ 16
தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பிக்கும் முன்பு பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் ரஜினிகாந்த்
5/ 16
பாலசந்தர் இயக்கத்தில் 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி வெளியான அபூர்வ ராகங்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த்.
6/ 16
1978-ம் ஆண்டு வெளியான பைரவி படத்தில் தான் ரஜினிகாந்துக்கு சூப்பர் ஸ்டார் என்ற டைட்டில் வழங்கப்பட்டது.
7/ 16
மூன்று முடிச்சு, 16 வயதினிலே, பைரவி, முள்ளும் மலரும், நினைத்தாலே இணிக்கும், பில்லா, முரட்டுக்காளை, தில்லு முல்லு, படிக்காதவன் வேலைக்காரன் என 1970, 80களில் இவர் நடிப்பில் வெளியான எல்லா படங்களும் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. தில்லு முல்லு திரைப்படத்தின் மூலம் தான் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் என்பதையும் ரஜினிகாந்த் நிரூபித்தார்.
8/ 16
90-களில் தளபதி, அண்ணாமலை, அருணாச்சலம், பாட்சா, படையப்பா, முத்து என ரஜினி நடித்த அனைத்து படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட்ஸ் தான்.
9/ 16
2002-ம் ஆண்டு வெளியான பாபா படத்துக்கு சரியான வரவேற்பு இல்லாத நிலையில் 3 வருட இடைவெளிக்கு பின்னர் இவர் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் பட்டித் தொட்டி எங்கும் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை புரிந்தது.
10/ 16
இதைத்தொடர்ந்து இயக்குநர் சங்கருடன் இணைந்து 2007-ஆண்டு வெளியான சிவாஜி படம் மூலம் இந்திய சினிமாவின் வசூல் சக்ரவர்த்தியாக முடிசூடினார்.
11/ 16
2010-ம் ஆண்டு மீண்டும் இயக்குநர் சங்கருடன் இணைந்து எந்திரன் படத்தில் நடித்தார் ரஜினிகாந்த். தற்போது வரை தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக திகழ்ந்து வருகிறார் .
12/ 16
ரஜினிகாந்த் ஆறு முறை தமிழக அரசு திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார். அதில் நான்கு முறை சிறந்த நடிகருக்கான விருதும், இரண்டு முறை சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதினையும் பெற்றுள்ளார். சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார்.
13/ 16
ரஜினிகாந்தின் படங்கள் அதிரடியும், நகைச்சுவையும் நிறைந்த பொழுதுபோக்குத் திரைப்படங்களாக உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்துப் பார்ப்பதாக இருக்கும். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 167 திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
14/ 16
ரஜினிகாந்தின் 167-வது படமாக தர்பார் படம் தயாராகி வருகிறது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஷுடன் முதல்முறையாக இணைந்துள்ளார்.
15/ 16
ரஜினி சினிமாத்துறைக்கு வந்து இன்றுடன் 44 வருடங்களான நிலையில் அதை கொண்டாடும் விதமாக ரஜினி ரசிகர்கள் #44YrsOfUnmatchableRAJINISM என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்துள்ளனர்.
16/ 16
ரஜினியின் சினிமா பயணங்களையும் ரசிகர்கள் பதிவிட்டு வாழ்த்து கூறி வருகின்றனர்