நடிகர் ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் தனது நட்சத்திர பிறந்தநாளைக் கொண்டாடினார். நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் டிசம்பர் 12-ம் தேதி என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவரது நட்சத்திரப்படி இன்று அவருக்கு பிறந்தநாள். இந்நிலையில் போயஸ் கார்டன் இல்லத்தில் தனது நட்சத்திர பிறந்தநாளையொட்டி சிவாச்சாரியார்களை வைத்து பூஜை உள்ளிட்ட வழிபாடுகளை நடத்தினார் ரஜினிகாந்த்.