தொலைகாட்சிகளில் சமீப காலமாக பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வந்தவண்ணம் உள்ளன. அந்த வகையில் 'சூப்பர் குயின்' என்கிற ஒரு புதிய ரியாலிட்டி ஷோ ஜனவரி 16 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதில் 12 பிரபல தமிழ் தொலைக்காட்சி நடிகைகள் கலந்து கொள்ள உள்ளனர். அதன்படி தங்களின் திறமை மற்றும் வலிமையை நிரூபிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் தரப்படும் டாஸ்க்குகள் பல்வேறு சவால்களை கொண்ட போட்டிகளாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கலந்த கொள்ள போகும் அந்த 12 போட்டியாளர்கள் யார்யார் என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
ஆஷா கவுடா : இவர் ஒரு நடிகை மட்டுமல்லாமல் ஒரு சிறந்த மாடலும் ஆவார். நந்த கோபால் நடித்த கோகுலத்தில் சீதை சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது சிறந்த நடிப்பின் மூலம் தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்து வந்துள்ளார். தற்போது இவரும் சூப்பர் குயின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.
ஜனனி அசோக் குமார் : நடிகை ஜனனி அசோக் குமார் பன்முக தன்மை கொண்டவர். இவர் தற்போது 'நாம் இருவர், நமக்கு இருவர் சீசன் 2' சீரியலில் நடித்து வருகிறார். இவற்றுடன் செம்பருத்தி, மௌன ராகம் ஆகிய தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்தவர். மேலும் இவர் பிரபலமான நண்பேன்டா படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேஜஸ்வினி கவுடா : பிலி ஹெந்தி என்கிற கன்னட சீரியலின் மூலம் இவர் அறிமுகமானார். பின்னர் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் சில குறிப்பிட்ட சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்துள்ளார். மேலும் இவர் 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்' என்கிற படத்தில் நடித்ததற்காக நன்கு அறியப்பட்டவர்.
ஐஸ்வர்யா கிருஷ்ணன் : ஜீ டிவியின் மிக பிரபலமான சர்வைவர்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் ஐஸ்வர்யா கிருஷ்ணன் பல இல்லத்தரசிக்கு பிடித்தமானவராக மாறியுள்ளார். இவர் ஒரு விளையாட்டு வீரர். எனவே, இது போன்ற நிகழ்ச்சிகளில் விருப்பத்துடன் கலந்து கொள்கிறார். மேலும் இவர் ஒரு சான்று பெற்ற பயிற்சியாளர் மற்றும் மாடல் ஆவார்.
ஆயிஷா : ஜீ தமிழ் தலைக்காட்சியில் நேயர்களுக்கு ஆயிஷா என்றால் அவ்வளவு பிடிக்கும். அந்த அளவிற்கு "சத்யா" சீரியல் மூலம் மக்களின் இதயத்தில் இடம் பிடித்தவர். இவரின் ஜாலியான நடிப்பினால் பலரை கவர்ந்துள்ளார். இதற்கு முன் விஜய் டிவி சீரியல்களில் நடித்துள்ளார். இவரின் சிறப்பான நடிப்பின் சமூக வலைதளங்களில் அதிக ஃபாலோவர்ஸ் பின்பற்றி வருகின்றனர்.