வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை ஆகிய இரண்டுமே சினிமா வாழ்க்கையில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பு போன்றது. சீனியர் ஜூனியர்கள் என இரண்டுமே வெவ்வேறு கோணங்களில் பார்க்கப்பட்டது. முன்பெல்லாம், வெள்ளித்திரையில் மார்க்கெட் இழந்தவர்கள் சின்னத்திரை பக்கம் வருவது வாடிக்கையாக இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் சின்னத்திரையில் வரும் நடிகர்கள் மற்றும் ரியாலிட்டி ஷோகளில் கலக்கும் பிரபலங்கள் வெள்ளித்திரையில் தடம் பதித்து வருகின்றனர்.
உதாரணத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயனை எடுத்துக்கொள்ளலாம். அந்த அளவுக்கு சின்னத்திரை மக்களோடு ஒன்றி உள்ளது. மேலும் சின்னத்திரையின் மூலம் மக்களின் பேராதரவையும் பெற முடியும் என்பதை சினிமா பிரபலங்கள் தற்போது உணர்ந்துள்ளனர். இதன் காரணமாகவோ என்னவோ வெள்ளித்திரைக்கும் சிறிய திரைக்கும் இடையிலான இடைவெளி சற்று குறைந்து வருகிறது. வெள்ளித்திரை நடிகர்கள் பலர் தொலைக்காட்சி சேனல்களில் நிகழ்ச்சிகளை நடத்த ஆர்வமாக இருக்கின்றனர். அந்த வகையில் விஜய் சேதுபதி முதல் ஷகீலா வரை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள வெள்ளித்திரை பிரபலங்கள் குறித்து காண்போம்.
நடிகை கனிஹா:திரையுலகில் கனிஹா என்று அழைக்கப்படும் திவ்யா வெங்கடசுப்பிரமணியம் விரைவில் சிங்கபெண்ணே என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிவி-யில் தொகுப்பாளராக மாறிய பிறகு, அவர் கலக்க போவது யாரு மற்றும் மெகா தங்க வேட்டை ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
நடிகை ஷகீலா:நடிகை ஷகீலா தற்போது கன்னி தீவு-உல்லாச உலகம் 2.0 நிகழ்ச்சியில் ராஜா மாதாவின் புதிய அவதாரத்தில் காணப்படுகிறார். இந்த நகைச்சுவை நிகழ்ச்சி கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிறது. தமிழில், அவர் கடைசியாக குக்கு வித் கோமாலிஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களின் மனதில் மீண்டும் இடம்பிடித்தார்.
நடிகை ஜீவா தங்கவேல்:ஜீவா தங்கவேல் வரவிருக்கும் எங்க வீட்டு மீனாட்சி எனும் நிகழ்ச்சியில் சிதம்பரமாக தோன்றுகிறார். அவருடன் ஸ்ரீதா சிவதாஸ் (மீனாட்சியாக) முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான ஜீவா, பின்னர் கானா காணும் காலங்கள் நிகழ்ச்சியில் நடித்திருந்தார். பின்னர் வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் ரோபோ சங்கர்:கலர்ஸ் தமிழில் கன்னி தீவு-உள்ளாசா உலகம் 2.0 என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் கிங் ஜல்சானந்தாவாக ரோபோ சங்கர் தோன்றுகிறார். இவர் முதன்முதலில் விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர். பின்னர், திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். மேலும் 2018 இல் விஜய் டிவியின் கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்ஸில் ஜட்ஜ்-ஆக பங்கேற்றிருந்தார்.
நடிகை சோனா:சோனா ஹைடன் என்கிற சோனா ஜூலை 19 முதல் கலர்ஸ் தமிழில் திரையிடப்பட்டு வரும் அபி டெய்லர் சீரியல் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். கதாநாயகன் அசோக் பாண்டியனின் (மதன் பாண்டியன்) தாயாக நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பூவெல்லாம் உன் வாசம் படத்தில் அறிமுகமான இவர் 40 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் 2002 இல் மிஸ் தென்னிந்தியா அழகிப் போட்டியை வென்றவர்.
நடிகர் அர்ஜுன்:ரசிகர்களால் அர்ஜுன் என்று பிரபலமாக அறியப்படும் அர்ஜுன் சர்ஜா வரவிருக்கும் ரியாலிட்டி ஷோவான சர்வைவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் சர்வைவர் நிகழ்ச்சி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அர்ஜுன் பல்வேறு மொழிகளில் 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றால், இது அவரது முதல் தமிழ் தொலைக்காட்சி அறிமுகத்தை குறிக்கும்.