தனது காதலருடன் சென்று அத்திவரதரை தரிசனம் செய்துள்ளார் நடிகை நயன்தாரா
2/ 7
கடந்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதி தொடங்கியது அத்திவரதர் வைபவம். இதுவரை 1 கோடி பேர் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3/ 7
48 நாட்கள் நடைபெறும் இந்த அத்திவரதர் வைபவம் 17-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் நாளுக்கு நாள் காஞ்சிபுரத்தை நோக்கி பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர். கடைசி நாளான 17-ம் தேதி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
4/ 7
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நள்ளிரவில் அத்திவரதரை தரிசனம் செய்தார்.
5/ 7
ரஜினிகாந்தைத் தொடர்ந்து லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவும் அவரது காதலரான விக்னேஷ் சிவனுடன் நேற்று நள்ளிரவில் அத்திவரதரை தரிசனம் செய்தார்.
6/ 7
நயன்தாரா மட்டுமின்றி நடிகை த்ரிஷா, பிகில் படத்தின் கிரியேட்டிவ் தயாரிபாளர் அர்ச்சனா கல்பாத்தியுடன் சென்று அத்திவரதரை தரிசனம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
7/ 7
நடிகை நமிதாவும் தனது கணவருடன் காஞ்சிபுரம் வந்து அத்திவரதரை தரிசனம் செய்தார்.