பின்னர் இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வசித்துவரும் செய்தி தமிழ் சினிமாவில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதன்பின் நயன்தாரா படங்களுக்கு கதை கேட்கத் தொடங்கிய விக்னேஷ் சிவன், அவர் படங்களை மெருகேற்றும் பணிகளிலும் ஈடுபட்டார். அந்த வகையில் டோரா, கோலமாவு கோகிலா என நயன்தாராவை மையப்படுத்தி உருவாகும் படங்களில் பாடலாசிரியராக விக்னேஷ் சிவன் பணியாற்றினார்.
சமீபத்தில் தமிழ்ப்புத்தாண்டை தனது குடும்பத்தினருடன் கொண்டாடியபோது இருவரது நிச்சயதார்த்தம் குறித்தும் திருமணம் குறித்தும் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது தர்பார், விஜய் 63 படங்களில் பிஸியாக நடித்துவரும் நயன்தாரா இந்த வருட இறுதியில் நவம்பர் மாதத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இவர்களது திருமணம் நடைபெற இருப்பதாகவும் கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.