முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » மூவி டைம்: கான்ஜுரிங் அளவுக்கு திகில் கொடுக்கிறதா மேகன்? விமர்சனம் இதோ!

மூவி டைம்: கான்ஜுரிங் அளவுக்கு திகில் கொடுக்கிறதா மேகன்? விமர்சனம் இதோ!

M3GAN : ஹாலிவுட்டில் உருவான மேகன் திரைப்படம் எப்படி இருக்கு?

 • 18

  மூவி டைம்: கான்ஜுரிங் அளவுக்கு திகில் கொடுக்கிறதா மேகன்? விமர்சனம் இதோ!

  ஹாலிவுட்டில் பலருக்கும் தெரிந்த திகில் படம் என்றால் தி கான்ஜுரிங். ஒரு பொம்மையை பார்த்தே பயம் கொள்ள வைக்கும் அந்த பேய் படத்தை இயக்கியவர் ஜேம்ஸ் வான். தற்போது அவரது கதையில் உருவாகியுள்ள புது பேய் பொம்மை கதைதான் மேகன். ஜெரால்ட் ஜான்ஸ்டோன் இப்படத்தை இயக்கினாலும் கதை, திரைக்கதை ஜேம்ஸ் வான் தான்

  MORE
  GALLERIES

 • 28

  மூவி டைம்: கான்ஜுரிங் அளவுக்கு திகில் கொடுக்கிறதா மேகன்? விமர்சனம் இதோ!

  வழக்கமாக பொம்மைகளை பேயாக காட்டும் வான் மேகன் படத்தின் டிஜிட்டல் பொம்மையை வைத்து கதையை உருவாக்கியுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 38

  மூவி டைம்: கான்ஜுரிங் அளவுக்கு திகில் கொடுக்கிறதா மேகன்? விமர்சனம் இதோ!

  புகழ்பெற்ற பொம்மை தயாரிக்கும் நிறுவனத்தில் அடுத்த தலைமுறைக்கான டிஜிட்டல் மற்றும் ரோபோ வகை பொம்மைகளை உருவாக்கி வருகிறார்கள்.

  MORE
  GALLERIES

 • 48

  மூவி டைம்: கான்ஜுரிங் அளவுக்கு திகில் கொடுக்கிறதா மேகன்? விமர்சனம் இதோ!

  அதில் ஒருவர்தான் நாயகி. அவருடைய அக்காவும், அக்கா கணவரும் விபத்தில் இறந்துவிடவே அவரின் ஒரே மகளை தன்னுடன் தங்க வைத்துக்கொள்கிறார் நாயகி. வீட்டில் இருக்கும் சிறுமிக்கு துணையாக தான் தயாரித்த ஒரு 'சிறுமி பொம்மை'யை கொடுக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 58

  மூவி டைம்: கான்ஜுரிங் அளவுக்கு திகில் கொடுக்கிறதா மேகன்? விமர்சனம் இதோ!

  பொம்மை என்றாலும் அது டிஜிட்டல் உலகத்துக்கு ஏற்ற ரோபோ டைப் பொம்மை. தன்னுடைய தயாரிப்பான அந்த ரோபோ மனிதர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளும் அளவுக்கு உள்ளது.

  MORE
  GALLERIES

 • 68

  மூவி டைம்: கான்ஜுரிங் அளவுக்கு திகில் கொடுக்கிறதா மேகன்? விமர்சனம் இதோ!

  ஒரு கட்டத்தில் ரோபோவும் சிறுமியும் மிகவும் நெருக்கமான நண்பர்களாக மாறவே,அந்த ரோபோ சிறுமியின் பாதுகாப்புக்காக எந்த எல்லைக்கும் செல்கிறது.

  MORE
  GALLERIES

 • 78

  மூவி டைம்: கான்ஜுரிங் அளவுக்கு திகில் கொடுக்கிறதா மேகன்? விமர்சனம் இதோ!

  ஷங்கர் எடுத்த ரோபோ படம்தான் இப்படத்தின் தீம் என்றாலும் சிறுமி ரோபோ கொலை செய்யும் காட்சிகள் திகிலூட்டுகின்றன. என்னதான் உணர்வுகள் கொடுக்கப்பட்டாலும் எந்த மெஷினும் மனிதனாக முடியாது என்பதையும், டிஜிட்டல் உலகத்தின் அடுத்தக்கட்டத்தில் உள்ள சிக்கல்களையும் இப்படம் தெளிவாக்குகிறது.

  MORE
  GALLERIES

 • 88

  மூவி டைம்: கான்ஜுரிங் அளவுக்கு திகில் கொடுக்கிறதா மேகன்? விமர்சனம் இதோ!

  கான்ஜுரிங் அளவுக்கு திகில் இல்லை என்றாலும் சோர்வு கொடுக்காத திகில் படமாகவே மேகன் இருக்கிறது.

  MORE
  GALLERIES