நாக சைதன்யா, சாய் பல்லவி, தேவயானி, ஈஸ்வரிராவ் நடித்திருந்த இந்தப் படம் வெளியான முதல்நாளில் நிசாம் பகுதியில் மட்டும் தயாரிப்பாளர் ஷேராக 3.5 கோடிகளை வசூலித்துள்ளது. உலக அளவில் முதல்நாள் ஷேர் மட்டும் 10 கோடிகளுக்கும் மேல். சனிக்கிழமையான இன்று முன்பதிவு மிக அதிகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை இது இன்னும் அதிகரிக்கும். சேகர் கம்முலா அடுத்து தனுஷ் நடிக்கும் பான் - இந்தியா திரைப்படத்தை இயக்குகிறார்.