விட்டிலிகோ என்ற சருமநோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகை மம்தா மோகன் தாஸ் தெரிவித்துள்ளார். இதனால் தான் நிறத்தை இழப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
2/ 8
நடிகை மம்தா மலையாளத்தில் மயோக்கம் என்ற திரைப்படத்தின் மூலம் 2005ம் ஆண்டு அறிமுகம் ஆனார். அதன்பின்னர் பல மலையாள திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்
3/ 8
மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளிலும் நடித்துள்ளார் மம்தா. தமிழில் குசேலன், சிவப்பதிகாரம், தடையற தாக்க, குரு என் ஆளு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்
4/ 8
தனக்கு ஆட்டோ இம்யூன் எனப்படும் விட்டிலிகோ நோய் இருப்பதாகவும் இதனால், தன்னுடைய நிறம் மாறுவதாகவும் அவர் இன்ஸ்டாவில் குறிப்பிட்டுள்ளார்
5/ 8
சூரியன் குறித்தும் தன்னுடைய நோய்தாக்கம் குறித்தும் குறிப்பிட்டுள்ளார் நடிகை மம்தா. ஒரு செல்ஃபியையும் அவர் பதிவிட்டுள்ளார்
6/ 8
விட்டிலிகோ என்பது தோலின் நிறத்தை இழக்கச்செய்யும் சரும நோய் ஆகும். இது எந்த வகை தோல் நிறமுடைய நபருக்கும் வரும்
7/ 8
இந்த நோயால் பாதிக்கப்பட்டால் தோல் நிறம் இழக்கும். கை, கால், உதடு, முடி என உடலின் எந்த பாகத்திலும் இந்த நோயால் நிறம் இழக்கலாம். உடலில் ஆங்காங்கே நிறமிழந்து திட்டுகள் உருவாகும்
8/ 8
விட்டிலிகோ நோய்க்கு சிகிச்சை இல்லை என்றாலும் நிற மாற்றத்தை குறைக்க சிகிச்சைகள் உள்ளன