பிரபலங்களின் திருமணம் என்றால் ரசிகர்களிடையே அதிகளவு எதிர்ப்பார்ப்பு இருக்கும். அதுவும் அவர்கள் திரையில் பார்த்து ரசித்த அவர்களுக்கு மிகவும் பிடித்த நடிகர், நடிகை காதலித்து திருமணம் செய்துகொண்டால் சொல்லவா வேண்டும்.? அந்த வகையில் இதுவரை தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபலங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்...
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா பூவெல்லாம் கேட்டுப்பார், மாயாவி, காக்க காக்க, ஆகிய படங்களில் தன்னுடன் நடித்த நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடைப்பெற்றது. இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். தங்களது 15-வது திருமண நாளை முன்னிட்டு தான் வரைந்த ஓவியத்தை சூர்யாவுக்குப் பரிசாக வழங்கியுள்ளார் ஜோதிகா.