சரவணன் அருள் நாயகனாக நடிக்கும் படத்தின் பாடல்காட்சிக்கு மட்டும் ரூ.10 கோடி செலவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2/ 7
அஜித், விக்ரம் நடித்த உல்லாசம் படத்தை இயக்கிய ஜேடி - ஜெர்ரி என்ற இரட்டை இயக்குநர்கள் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சரவணன் அருள்.
3/ 7
இந்தப் படத்தில் சரவணனுக்கு ஜோடியாக கீர்த்திகா திவாரி நடிக்கிறார். இரண்டாவது நாயகியாக பிரபல நடிகை ஒருவர் நடிக்க இருக்கிறார்.
4/ 7
புரொடக்ஷன் நம்பர் 1 என்ற தற்காலிக பெயரில் சரவணன் தயாரித்து நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 1-ம் தேதி துவங்கியது.
5/ 7
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்தப் படத்தில் பிரபு, விவேக், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், கோவை சரளா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
6/ 7
பெரும் பொருட் செலவில் தயாராகும் இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ரூ.10 கோடி செலவு செய்து பிரமாண்ட செட் அமைத்து பாடல் காட்சி படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
7/ 7
இந்த பாடல் காட்சியில் சரவணன் அருள் கீர்த்திகா திவாரி நடனமாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன