தர்பார் படத்தின் சிறப்பு காட்சியை லதா ரஜனிகாந்த், ராகவா லாரன்ஸ், ரஜனிகாந்த் மகளள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகியோர் ரசிகர்கள் உடன் இணைந்து கண்டு ரசித்தனர்.
2/ 7
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் தர்பார். ரஜினிகாந்தின் 167-வது திரைப்படமாக உருவாகியுள்ள இதை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
3/ 7
இந்தப் படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாகவும், அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் நடித்துள்ளார். அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
4/ 7
தர்பார் படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி அளித்தையடுத்து அதிகாலை 4 மணிக்கு திரைப்படம் வெளியானது. சென்னையில் பல இடங்களில் சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டது. ரோஹிணி, காசி, பரங்கிமலை ஜோதி உள்ளிட்ட திரையரங்குகளில் வெளியானது.
5/ 7
தர்பார் வெளியாகும் திரையரங்கு முன் ரஜினி ரசிகர்கள் வெடி வெடித்து, கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் ஒயிலாட்டம், கரகாட்டம் , தப்பாட்டம் இசைத்தும் கொண்டாடினர்.
6/ 7
சென்னை ரோஹினி திரையரங்கத்தில் தர்பார் படத்தின் சிறப்பு காட்சியை ரசிகர்கள் உடன் லதா ரஜினிகாந்த், ராகவா லாரன்ஸ், சௌந்தர்யா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் கண்டு களித்தனர்.
7/ 7
இந்த புகைப்படங்களை ரோஹினி திரையரங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.