தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி. அர்ஜென்டினா அணியின் வெற்றியை ஏராளமான இந்திய சினிமா நட்சத்திரங்கள் கொண்டாடி வருகின்றனர். அர்ஜென்டினா அணியின் வெற்றியை கொண்டாடும் நட்சத்திரங்களில் நடிகை கீர்த்தி சுரேஷும் ஒருவர். நடிகை கீர்த்தி சுரேஷ் மெஸ்ஸியின் தீவிர ரசிகை ஆவார். இறுதி போட்டி ஆரம்பமாகும் முன்பு மெஸ்ஸியை வாழ்த்தி பதிவு ஒன்றையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டார் கீர்த்தி. அந்த பதிவில் 'இதுவரை கால்பந்து மைதானத்தை அலங்கரித்த சிறந்த வீரருக்கு, இது உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான போட்டியாகும். உங்கள் வெற்றியை அர்ஜென்டினாக்கள் மட்டுமல்ல, இந்த உலகத்தில் கால்பந்து விளையாட்டை மதிக்கும் அனைவரும் எதிர்ப்பார்க்கிறோம்' என்று பதிவிட்டுள்ளார். இறுதிப்போட்டியை தனது இல்லத்தில் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸியின் ஜெர்ஸியை அணிந்துகொண்டு பார்த்து ரசித்தார் கீர்த்தி. மெஸ்ஸியின் வெற்றியை கொண்டாடிய தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் கீர்த்தி.