இந்நிலையில் காஞ்சனா 3 படத்தில் பழிவாங்கும் பேய் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த 24 வயதாகும் ரஷ்ய நடிகை அலெக்ஸாண்ட்ரா டிஜவி கோவா மாநிலம் நார்த் கோவன் எனும் கிராமத்தில் தனது ஆண் நண்பருடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி ரஷ்ய நடிகை அலெக்ஸாண்ட்ரா டிஜவி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டறியப்பட்டுள்ளார்.
அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அவரின் உடலை அனுப்பி வைத்திருக்கின்றனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரின் இறப்புக்கு வேறு ஏதேனும் காரணமா என பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே கூற முடியும் என போலீசார் தெரிவித்திருக்கின்றனர். அதே நேரத்தில் நடிகையில் ஆண் நண்பரை இது குறித்து விசாரிக்க இருப்பதாகவும் கூறினர்.
கடந்த 2019ம் ஆண்டு ரஷ்ய நடிகை அலெக்ஸாண்ட்ரா, சென்னை புகைப்பட கலைஞர் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அவ்வழக்கில் அவரை அப்போது காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது நடிகை அலெக்ஸாண்ட்ராவின் மரணம் தொடர்பாக சென்னை புகைப்பட கலைஞரிடமும் விசாரணை நடத்தப்படலாம் என தெரிகிறது.