தமிழக அரசின் கலைமாமணி விருதுகளுக்கான பட்டியலில் நடிகர் விஜய்சேதுபதியின் பெயர் இடம்பெற்றிருந்த போதிலும் அவரது பெயர் மேடையில அறிவிக்கப்படவில்லை.
2/ 8
திரைத்துறை, எழுத்து உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
3/ 8
இதன்படி, 2011 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 201 நபர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
4/ 8
சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
5/ 8
3 சவரன் எடையுள்ள பதக்கம், சான்றிதழ் அடங்கிய இந்த விருதுடன், பாரதி, பால்சரஸ்வதி, எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோரின் பெயரிலான விருதுகளும் அளிக்கப்பட்டன.
6/ 8
2017-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர்களில் ஒருவராக விஜய்சேதுபதி தேர்வு செய்யப்பட்டு கலைமாமணி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் விருது வழங்கும் விழாவின் போது மேடையில் அவர் பெயர் அறிவிக்கப்பட வில்லை. அரங்கத்திற்கு தாமதாக வந்தது தான் அதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
7/ 8
படப்பிடிப்பில் இருந்த விஜய் சேதுபதி கலைவாணர் அரங்கத்திற்கு வரும் வழியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதால் தான் குறித்த நேரத்துக்கு வர முடியவில்லை என்று கூறப்படுகிறது.
8/ 8
விஜய் சேதுபதி மட்டுமின்றி பாடலாசிரியர் யுகபாரதியும் விருது விழாவுக்கு வரவில்லை.