திரையுலகில் கடந்த சில மாதங்களாக நடிகை ஆண்டிரியா மாயமாக இருந்தது ஏன் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
2/ 8
நடிகை ஆண்ட்ரியா தமிழில் விஸ்வரூபம்-2, வடசென்னை படத்திற்கு பின் அவருடைய படங்கள் ஏதும் வெளியாகவில்லை. அவரும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை.
3/ 8
'மாளிகை' என்ற பட அறிவிப்பிற்கு பின் ஏதும் வராத நிலையில் ஆண்ட்ரியா எங்கு சென்றார் என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
4/ 8
திடீரென்று நடிப்பிற்கு இடைவெளி விட்டது ஏன் என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே விளக்கமளித்துள்ளார்.
5/ 8
எனது மனஅழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல்ரீதியாகாவும், மனரீதியாகவும் பாதித்தது. என் வாழ்க்கையில் முதன்முறையாக நான் ஆயூர்வேத மருத்துவ முறையை முயற்சிக்க நான் முடிவு செய்தேன். அது தான் காரே (Kare)
6/ 8
என்னைப் போன்று காப்பிக்கு அடிமையானவர்களுக்கு இது எளிதானது அல்ல. ஆனால் ஒரு கப் மூலிகை தேநீர் மற்றும் ஐயங்கார் யோகா ஒரு நாளின் மிகநல்ல தொடக்கம்.
7/ 8
தற்போது நான் புதியவளாக என்னை உணர்கிறேன். அதற்கு காரணமாக இருந்த எனது மருத்துவர்கள் மற்றும் அவரது குழுவினர்களுக்கு மிகப்பெரிய நன்றி.
8/ 8
தற்போது மீண்டும் சமூக மற்றும் பொது வாழ்க்கைக்கு நான் திரும்பி உள்ளேன். அது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது என ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.
எனது மனஅழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல்ரீதியாகாவும், மனரீதியாகவும் பாதித்தது. என் வாழ்க்கையில் முதன்முறையாக நான் ஆயூர்வேத மருத்துவ முறையை முயற்சிக்க நான் முடிவு செய்தேன். அது தான் காரே (Kare)