இந்தப் படத்தின் டைட்டிலை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளான இன்று அறிவிப்பதாக கார்த்திக் சுப்புராஜ் அறிவித்திருந்தார். அதன்படி, ‘பெண்குயின்’ என்ற படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பம் தரித்திருக்கும் பெண்ணாக தோன்றியுள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், டைட்டிலும் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.