ரெண்டு (2006) : அனுஷ்கா தமிழில் முதன்முதலில் அறிமுகமான படம் ரெண்டு. சுந்தர்.சி இயக்கிய இந்த படத்தில் மாதவன் ரெட்டை வேடங்களில் நடித்து இருப்பார். ரீமாசென், அனுஷ்கா இருவரும் இந்த படத்தின் நாயகிகளாக நடித்து இருப்பார்கள். அனுஷ்காவின் முதல் படமான வெற்றிபடமாக அமையவில்லை என்றாலும் திரைபயணத்தை தொடங்கிய படம் இது தான்.
தெய்வதிருமகள் (2011) : விக்ரம் உடன் அனுஷ்கா இணைந்து நடித்த படம் தெய்வதிருமகள். மகள் - அப்பா பாசத்தை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும். இந்த படத்தில் அனுஷ்கா வழக்கறிஞராக நடித்து இருப்பார். கோர்டில் இவர் நடத்தும் வாதம் மற்றும் விக்ரமுடன் போட்டி போட்டு அருமையாக நடித்திருப்பவர். இந்த படத்தில் இவரது நடிப்பு சற்று முதிர்ச்சி பெற்றிருக்கும்.
இஞ்சி இடுப்பழகி(2015) : குண்டான பெண்கள் சமூகத்தில் எப்படி பார்க்கப்படுகிறார்கள், கல்யாணத்தின் போது அவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை எடுத்து காட்டியிருக்கும் இந்த திரைப்படம். இந்த கதையில் அனுஷ்காவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். ஆர்யா இந்த படத்தில் இவருடன் இணைந்து நடித்திருப்பார். இந்த படத்திற்காக அனுஷ்கா தனது எடையை அதிகரித்து நடித்து பலரது வாழ்த்துகளை பெற்றிருந்தார்.