ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » சர்வைவர் முதல் டான்ஸ் vs டான்ஸ் நிகழ்ச்சி வரை..புதிதாக களமிறங்கும் பிரம்மாண்ட ஷோக்கள்..

சர்வைவர் முதல் டான்ஸ் vs டான்ஸ் நிகழ்ச்சி வரை..புதிதாக களமிறங்கும் பிரம்மாண்ட ஷோக்கள்..

சர்வைவர் நிகழ்ச்சி முதல் டான்ஸ் vs டான்ஸ் நிகழ்ச்சி வரை பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.

 • 19

  சர்வைவர் முதல் டான்ஸ் vs டான்ஸ் நிகழ்ச்சி வரை..புதிதாக களமிறங்கும் பிரம்மாண்ட ஷோக்கள்..

  கொரோனாவால் முடங்கியிருந்த சின்னத்திரை மீண்டும் பழைய பார்முக்கு திரும்பியுள்ளது. டி.ஆர்பிஐ உயர்த்தவும், ரசிகர்களை ஈர்க்கவும் தமிழின் முன்னணி பொழுபோக்கு சேனல்களான சன் டீவி, விஜய் டீவி மற்றும் ஜீ தமிழ், கலர்ஸ் தொலைக்காட்சிகள் புத்தம் புதிய நிகழ்ச்சிகளை தயாரித்து வருகின்றனர். சில நிகழ்ச்சிகள் ஆகஸ்ட் 16 ஆம் தேதியான இன்று முதல் ஒளிபரப்பாகவும் உள்ளது. இந்த சீசனில் வெள்ளித்திரையில் கோலோச்சிய அர்ஜூன் சர்வைவர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும், டான்ஸ் vs டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் குஷ்பு நடுவராகவும் களமிறங்குகின்றனர். இதனால், சின்னத்திரை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எந்த நிகழ்ச்சி எப்போது ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்.

  MORE
  GALLERIES

 • 29

  சர்வைவர் முதல் டான்ஸ் vs டான்ஸ் நிகழ்ச்சி வரை..புதிதாக களமிறங்கும் பிரம்மாண்ட ஷோக்கள்..

  நம்ம வீட்டு பொண்ணு:விஜய் டீவியில் ‘நம்ம வீட்டு பொண்ணு’ என்ற புதிய சீரியல் ஆகஸ்ட் 16 முதல் ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலில் அஷ்வினி, சுர்ஜித் குமார் ஆகியோர் புதுமுகங்களாக அறிமுகமாகின்றனர். அவர்களுடன் அருணிமா, வைஷாலி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். கதைப்படி, நாயகன் கார்த்திக், மீனாட்சிக்கு எதிரெதிர் குணாதிசயங்கள் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவெடுக்கின்றனர். அதையொட்டி கதைக்களம் நகர உள்ளது.

  MORE
  GALLERIES

 • 39

  சர்வைவர் முதல் டான்ஸ் vs டான்ஸ் நிகழ்ச்சி வரை..புதிதாக களமிறங்கும் பிரம்மாண்ட ஷோக்கள்..

  தென்றல் வந்து என்னைத் தொடும்கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுந்தரி நீயும் சுந்தரி நானும் ஆகிய தொடரில் கதாநாயகனாக அறிமுகமான வினோத் பாபு, இந்த தொடரில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தர்ஷிகா லீட் ரோலில் நடிக்கிறார். இவர்களுடன் பிரியா, ராஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். காதல் திருமணத்துக்கு எதிராக இருக்கும் நாயகன், காதலை ஆதரிக்கும் தர்ஷிகாவை எதிர்பாராத சூழலில் தாலிக்கட்டி மனைவியாக்கிக்கொள்கிறார். இதிலிருந்து கதைக்களம் நகர உள்ளது. விஜய் டீவி வெளியிட்ட இந்த சீரியலின் புரோமோ அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

  MORE
  GALLERIES

 • 49

  சர்வைவர் முதல் டான்ஸ் vs டான்ஸ் நிகழ்ச்சி வரை..புதிதாக களமிறங்கும் பிரம்மாண்ட ஷோக்கள்..

  நினைத்தாலே இனிக்கும்: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘நினைத்தாலே இனிக்கும்’ சீரியல் ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. கதாநாயகனாக ஆனந்த் செல்வன் நடிக்கிறார். இவருடன் ஸ்வாதி, நேகா, ஜனனி பிரபு, மிதுன் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மிட்டாய் வியாபாரம் செய்யும் பொம்மியின் வாழ்க்கையை பின்னணியாக, கதைக்களம் கொண்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 59

  சர்வைவர் முதல் டான்ஸ் vs டான்ஸ் நிகழ்ச்சி வரை..புதிதாக களமிறங்கும் பிரம்மாண்ட ஷோக்கள்..

  சர்வைவர்: ஆக்ஷன் கிங் அர்ஜூன் முதன்முறையாக சின்னத்திரையில் தொகுப்பாளராக ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் களமிறங்க உள்ளார். சர்வதேச அளவில் வெற்றிபெற்ற நிகழ்ச்சியான சர்வைவர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. குறைவான அடிப்படை வசதிகள் மட்டுமே கொண்ட ஒரு தனித்தீவில் 20 போட்டியாளர்கள் 90 நாட்கள் இருக்க வேண்டும். அங்கு கொடுக்கப்படும் சவால்கள், டாஸ்க்குகள் அனைத்தையும் சரியாக செய்து, 90 நாட்கள் வரை இருப்பவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட உள்ளார். ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் மாத தொடக்கத்தில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.

  MORE
  GALLERIES

 • 69

  சர்வைவர் முதல் டான்ஸ் vs டான்ஸ் நிகழ்ச்சி வரை..புதிதாக களமிறங்கும் பிரம்மாண்ட ஷோக்கள்..

  எங்க வீட்டு மீனாட்சி: கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மீனாட்சி சீரியல் புத்தம் புதிதாக ஒளிபரப்பாக உள்ளது. ஜீவா தங்கவேல், ஸ்ரீதா, சங்கீதா, நீபா, பவ லக்ஷ்மணன், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். திருமண நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் சிதம்பரத்துக்கும், கல்லூரி பேராசிரியையாக இருக்கும் மீனாட்சிக்கும் இடையே உருவாகும் காதலைக் கொண்டு பயணிக்க உள்ளது. செப்டம்பர் முதல் ஒளிபரப்பாகும்.

  MORE
  GALLERIES

 • 79

  சர்வைவர் முதல் டான்ஸ் vs டான்ஸ் நிகழ்ச்சி வரை..புதிதாக களமிறங்கும் பிரம்மாண்ட ஷோக்கள்..

  டான்ஸ் vs டான்ஸ் சீசன் 2: கலர்ஸ் தமிழில் டான்ஸ் vs டான்ஸ் சீசன் 2 ரியாலிட்டி நிகழ்ச்சி செப்டம்பர் மாத தொடக்கத்தில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தேசிய விருது பெற்ற நடன இயக்குநரான பிருந்தா கோபாலுடன் இணைந்து குஷ்பு நடுவராக பங்கேற்கிறார். அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வந்த குஷ்பு, தேர்தலுக்குப் பிறகு வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 89

  சர்வைவர் முதல் டான்ஸ் vs டான்ஸ் நிகழ்ச்சி வரை..புதிதாக களமிறங்கும் பிரம்மாண்ட ஷோக்கள்..

  கயல்:சன் டீவியில் ஒளிபரப்பாக உள்ள கயல் சீரியலில் சஞ்சீவ் கதாயகனாக நடிக்க உள்ளார். விஜய் டீவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் பிரபலமான அவர், அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முன்னணி ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வந்தார். தற்போது சன் டீவிக்கு சென்றுள்ளார். அவருடன் சைத்திரா ரெட்டி, அபி நவ்யா, இஷூ ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். செப்டம்பர் முதல் புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

  MORE
  GALLERIES

 • 99

  சர்வைவர் முதல் டான்ஸ் vs டான்ஸ் நிகழ்ச்சி வரை..புதிதாக களமிறங்கும் பிரம்மாண்ட ஷோக்கள்..

  சிங்க பெண்ணே: சிங்க பெண்ணே சீரியல் மூலம் நடிகை கனிகா சின்னத்திரைக்கு அறிமுகமாக உள்ளார். வெள்ளித்திரையில் நடித்து பிரபலமான அவர், முதன்முறையாக சின்னத்திரை சீரியலில் நடிக்கிறார். பெண்மை போற்றும் வகையில் உருவாகும் இந்த சீரியலில் கனிகாவுடன் இணைந்து பிரியதர்ஷினி, ஆஷிகா, மதுமிதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். செப்டம்பர் மாதம் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  MORE
  GALLERIES