தமிழ் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்கள் எப்போதும் திறமையாளர்களை கண்டறிய நினைப்பவர்களுக்கு சரியான இடமாக அமைகிறது. குறிப்பாக இசையுலகைப் பொறுத்தவரை பல திறமையாளர்கள் ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக கண்டறியப்பட்டுள்ளனர். பாடகர்கள் முதல் இசையமைப்பாளர்கள் வரை, ரியாலிட்டி ஷோக்கள் பல திறமையான ஆளுமைகளை தங்கள் இருப்பை உணர்த்தியிருக்கின்றன. குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக பாடகி மற்றும் பாடகர்களாக வலம் வரும் பிரபலங்கள் ஏராளம். இசைத்துறையில் ஜொலிக்கும் சில முன்னாள் ரியாலிட்டி ஷோ போட்டியாளர்களின் விரிவான பட்டியல் இதோ...
1. கார்த்திக் தேவராஜ்: விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கீபோர்ட் பிளேயராக ரசிகர்களிடையே பிரபலமானவர் கார்த்திக் தேவராஜ். அந்நிகழ்ச்சியில் ‘மணி அண்ட் பேண்ட்’ இசைக்குழு சார்பில் பங்கேற்றார். இதன் மூலம் ஏ.ஆர்.ரகுமானின் இசைக்குழுவிலும் இடம் பிடித்த கார்த்திக் தேவராஜ், அவரது படங்கள், ஆல்பம் பாடல்கள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் கீபோர்ட் பிளேயராக அசத்தி வருகிறார்.
2. மாளவிகா சுந்தர்: சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மாளவிகா சுந்தர். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. கொம்பன் படத்திலிருந்து ‘கருப்பு நிறத்தழகி’, கடவுள் இருக்கான் குமாரு படத்திலிருந்து ‘கும் ஜாரே’, டி. இமான் இசையில் மனம் கொத்தி பறவைகள் படத்திலிருந்து ‘டாங் டாங்’ போன்ற பாடல்களை பாடியுள்ளார். கர்நாடக பாடகியான மாளவிகா சுந்தர் தற்போது இசையுலகில் கொடிகட்டி பறந்து வருகிறார்.
4. கானா பூவையார்: சூப்பர் சிங்கர் ஜூனியர் 6ல் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்தவர் பூவையார். சென்னை தமிழில் கானா பாடல்கள் பாடி ரசிகர்கள் மனம் கவர்ந்த பூவையாருக்கு, ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன் இணைந்து நட்பே துணையில் ஒரு பாடலைப் பாடும் வாய்ப்பு கிடைத்தது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படத்தில் பூவையார் பாடிய வெறித்தனம் பாடல் ரசிகர்களிடையே மில்லியன் கணக்கில் வியூஸ்களை அள்ளியது. அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பூவையார் நடித்து அசத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரகதி, நித்ய ஸ்ரீ, பிரியங்கா, ராஜலட்சுமி மற்றும் செந்தில் என சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக திரையுலகில் கால் பதித்த பாடகர் மற்றும் பாடகிகளின் பெயர்கள் ஏராளம்.