முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » கெட்ட வார்த்தைகளை அள்ளி வீசும் ஃபார்ஸி வெப் சீரிஸ்.. ஓடிடி தைரியத்தில் ஓவர் ரைடு! விமர்சனம் இதோ!

கெட்ட வார்த்தைகளை அள்ளி வீசும் ஃபார்ஸி வெப் சீரிஸ்.. ஓடிடி தைரியத்தில் ஓவர் ரைடு! விமர்சனம் இதோ!

Farzi Review: எட்டு பாகங்களாக சுமார் ஆறு மணி நேரம் ஓடக்கூடிய இந்த வலைதொடர், கள்ள நோட்டு உருவாக்கம் புழக்கம் பற்றி பேசியுள்ளது

 • News18
 • 17

  கெட்ட வார்த்தைகளை அள்ளி வீசும் ஃபார்ஸி வெப் சீரிஸ்.. ஓடிடி தைரியத்தில் ஓவர் ரைடு! விமர்சனம் இதோ!

  ஷாகித் கபூர், விஜய் சேதுபதி புகழை மீட்டுத் தரும் முயற்சியாக ஃபார்ஸி வெப் சீரிஸ் அமைந்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 27

  கெட்ட வார்த்தைகளை அள்ளி வீசும் ஃபார்ஸி வெப் சீரிஸ்.. ஓடிடி தைரியத்தில் ஓவர் ரைடு! விமர்சனம் இதோ!

  இந்தியில் மனோஜ் பாஜ்பாய், சமந்தா, பிரியாமணி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற பேமிலி மேன் என்ற வலைத்தொடரை ராஜ் மற்றும் டிகே ஆகிய இரட்டையர் கூட்டணி இயக்கி இருந்தது. இந்த வெற்றிக் கூட்டணி தற்போது பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர், விஜய் சேதுபதி, ராஷி கண்ணா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து அமேசான் வலைதளத்தில் ஃபார்ஸி என்ற வலைத்தொடர் வெளியாகியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 37

  கெட்ட வார்த்தைகளை அள்ளி வீசும் ஃபார்ஸி வெப் சீரிஸ்.. ஓடிடி தைரியத்தில் ஓவர் ரைடு! விமர்சனம் இதோ!

  எட்டு பாகங்களாக சுமார் ஆறு மணி நேரம் ஓடக்கூடிய இந்த வலைதொடர், கள்ள நோட்டு உருவாக்கம் புழக்கம் பற்றி பேசியுள்ள விதம் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது.

  MORE
  GALLERIES

 • 47

  கெட்ட வார்த்தைகளை அள்ளி வீசும் ஃபார்ஸி வெப் சீரிஸ்.. ஓடிடி தைரியத்தில் ஓவர் ரைடு! விமர்சனம் இதோ!

  கொள்கைக்காக அச்சு பதிப்பகம் நடத்தி வரும் ஷாகித் கபூரின் தாத்தா பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகிறார். அப்போது பணத்தை அச்சடித்தால் என்ன என்ற எண்ணத்துடன் தேர்ந்த ஓவியரான ஷாகித்தும் அச்சு வித்தையில் தேர்ந்த அவரது நண்பரும் கள்ள நோட்டை தயாரிக்க தொடங்குகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 57

  கெட்ட வார்த்தைகளை அள்ளி வீசும் ஃபார்ஸி வெப் சீரிஸ்.. ஓடிடி தைரியத்தில் ஓவர் ரைடு! விமர்சனம் இதோ!

  இந்தியாவிற்குள் கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கும் அதிகாரியாக விஜய் சேதுபதி வருகிறார். இவர்கள் இடையேயான ஆடுபுலி ஆட்டமாக இந்த பார்சி கதை அமைக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 67

  கெட்ட வார்த்தைகளை அள்ளி வீசும் ஃபார்ஸி வெப் சீரிஸ்.. ஓடிடி தைரியத்தில் ஓவர் ரைடு! விமர்சனம் இதோ!

  ரூபாய் நோட்டுகளில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பங்களைளையும், நுணுக்கங்களையும் ரசிகர்களுக்கு தெளிவாக விளக்குகிறது இந்த தொடர். மேலும் கள்ள நோட்டு எவ்வாறு உருவாகிறது அது எவ்வாறு வெளிநாடுகளின் வழியாக இந்தியாவிற்குள் புழக்கத்திற்கு வருகிறது என அதிர்ச்சி அளிக்கும் பக்கங்களை விவரிக்கும் இந்த வலைத்தொடர், ரசிகர்களை சபாஷ் போட வைக்கிறது. குறிப்பாக தமிழ் வசனங்கள் பல இடங்களில் பட்டையைக் கிளப்புகிறது

  MORE
  GALLERIES

 • 77

  கெட்ட வார்த்தைகளை அள்ளி வீசும் ஃபார்ஸி வெப் சீரிஸ்.. ஓடிடி தைரியத்தில் ஓவர் ரைடு! விமர்சனம் இதோ!

  தமிழ் மொழியில் ஷாகித் கபூர் கதாபாத்திரத்திற்கு ஜீவாவின் குரல் கட்சிதமாக பொருந்திப் போகிறது. விஜய் சேதுபதியின் குரலாக ஒலித்திருக்கும் திருச்சி சரவணக்குமார் குரல் காட்சிக்கு காட்சி ஆச்சரியத்தை வழங்குகிறது. பாலிவுட்டில் மார்க்கெட்டை இழந்து வந்த ஷாகித் கபூருக்கும் தமிழில் வெற்றி திரைப்படங்களை கொடுக்க தடுமாறி வரும் விஜய் சேதுபதிக்கும் இந்திய அளவில் புகழை மீட்டு கொடுத்துள்ள படைப்பாக ஃபார்ஸி அமைந்துள்ளது. வெப் தொடருக்கு சென்சார் இல்லை என்ற ஒரே காரணத்தால் காட்சிக்கு காட்சி கெட்ட வார்த்தைகளை அள்ளி வீசுகிறது ஃபார்ஸி. குடும்பத்துடன் அமர்ந்து படம் பார்க்க இது சரிவாராது என்பதும், வெப் சீரிஸ் நேரமும் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

  MORE
  GALLERIES