விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ்,ஆண்டாள் அழகர் உள்ளிட்ட தொடர்களில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகமானவர் அனு.
2/ 5
ஜீ தமிழில் மெல்ல திறந்தது கதவு தொடரில் நடித்து மக்களிடம் பிரபலமான இவர், மிஸ்டர் அன்ட் மிஸஸ் கில்லாடி உள்ளிட்ட நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
3/ 5
விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார் அனு. ஆனால் அவரது கேரக்டர் கொலை செய்யப்பட்டது போல் கதை அமைக்கப்பட்டுள்ளது. எனவே இனி அவர் அத்தொடரிலிருந்து விலகுவார் என தெரிகிறது.
4/ 5
தமிழில் அனைத்து முன்னணி பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளிலும் தலைகாட்டி விட்ட அனு, தற்போது சன் டிவியில் புதிய சீரியலில் நடிக்க இருக்கிறார். இத்தொடர் சரித்திர பின்னணி கொண்டது என அனு தனது சோஷியல் மீடியாவில் தெரிவித்துள்ளார்.
5/ 5
புதிய சீரியலில் நடித்து வரும் அனுவுக்கு ரசிகர்களும், சின்னத்திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.