நடிகை பிரியங்கா மோகன் 2019ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான "ஒந்து கதை ஹெல" என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
2/ 16
அதன் பின்னர் அதே ஆண்டு தெலுங்கில் நானிக்கு ஜோடியாக 'கேங் லீடர்' என்ற படத்திலும் நடித்திருந்தார் பிரியங்கா மோகன்.
3/ 16
கேங் லீடர் படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார் பிரியங்கா மோகன்.
4/ 16
அதன் பிறகு தெலுங்கில் முன்னணி நடிகர் ஷர்வானந்த்க்கு ஜோடியாக 'ஸ்ரீகாரம்' எனும் படத்தில் நடித்தார்.
5/ 16
பின்னர் கடந்தாண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயனுக்கு ஜோடியாக 'டாக்டர்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் பிரியங்கா மோகன்.
6/ 16
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற 'டிக் டாக் எல்லாம் இங்கே' பாடலானது பட்டி தொட்டியெல்லாம் ஹிட் அடித்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
7/ 16
அதையடுத்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.
8/ 16
இப்படமானது கடந்த மார்ச் 10ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
9/ 16
சிவகார்த்திகேயனுடன் நடித்த டாக்டர் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து அவர் அடுத்ததாக நடித்துள்ள ‘டான்’ படத்திலும் ஹீரோயினாக நடித்திருக்கிறார் பிரியங்கா மோகன்.
10/ 16
விரைவில் வெளியாக உள்ள 'டான்' திரைப்படத்தின் ப்ரோமோஷன் ஒர்க்கில் தற்போது பிசியாக இருக்கிறார் பிரியங்கா.
11/ 16
ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் நடிகை ப்ரியங்கா மோகனுக்கான ரசிகர் கூட்டம் அதிகம்.
12/ 16
எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்வார்.
13/ 16
நடிகை பிரியங்கா மோகனிற்கு இன்ஸ்டாகிராமில் 2.6 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.
14/ 16
இந்நிலையில் ப்ரியங்கா வெள்ளை நிற புடவையில் எடுத்துள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
15/ 16
அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
16/ 16
நடிகை பிரியங்கா மோகன் (Image : Instagram @priyankaamohanofficial)