இரண்டு கைகளையும் இழந்த பிரணவ் கடந்த மாதம் கேரள முதல்வரை நேரில் சந்தித்து வெள்ள நிவாரண நிதி வழங்கினார். கைகள் இல்லாததால் கால்களையே கைகளாக பாவித்து வரும் இவரின் கால்களை பிடித்து கை குலுக்கினார் பினராய் விஜயன். அப்போது இருவரும் எடுத்துக்கொண்ட செல்ஃபி வைரலானது.