ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறுகிறது. அதற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது .
2/ 9
தர்பார் இசை வெளியீட்டு நிகழ்வுக்காக அமைக்கப்பட்டிருக்கும் இந்த அரங்கில் 8000 இருக்கைகள் உள்ளன.
3/ 9
தர்பார் இசை வெளியீட்டு விழாவைக் காண தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் ரசிகர்கள் சென்னையை நோக்கி படையெடுத்துள்ளனர்.
4/ 9
அதிக ரசிகர்கள் குவிந்துள்ளதால் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது
5/ 9
தர்பார் பட இசை வெளியீட்டு வேலைகளை அங்கு அமைக்கப்பட்டிருக்கும் அறையில் இருந்து கவனிக்கிறார் அனிருத்
6/ 9
தர்பார் இசைவெளியீட்டு விழாவில் ரஜினியைக் காணவும், அவரது பேச்சைக் கேட்கவும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். தங்களது வருகையை மற்றவருக்கு தெரிவிக்க அவர்கள் செல்ஃபி எடுத்துக் கொள்ளவும் தவறவில்லை.
7/ 9
தர்பார் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மட்டுமே கலந்து கொள்ள இருப்பதாக தெரிகிறது.
8/ 9
இசை வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்த நடிகர் ஸ்ரீமன் அங்கு அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் படம் குறித்த தகவல்களை பேட்டியளித்து வருகிறார்.
9/ 9
திருவிழா போல் நடைபெறும் இசைவெளியீட்டு நிகழ்வில் பிரபலங்களுக்கென தனி இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.