அன்புடன் குஷி, அரண்மனை, நந்தினி ஆகிய தொடர்களில் நடித்து பிரபலமானவர் ஸ்ரேயா அஞ்சன். கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான திருமணம் எனும் தொடரில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்தத் தொடரில் ஜனனி என்ற வேடத்தில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார் ஸ்ரேயா அஞ்சன். இந்தத் தொடரில் தன்னுடன் ஜோடியாக நடித்து சித்துவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது சித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 தொடரில் நடிக்க, ஸ்ரேயா ஜி தமிழில் ஒளிபரப்பாகும் ரஜினி என்ற தொடரில் நடித்துவருகிறார். ஸ்ரேயாவை இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இந்த நிலையில் சிறுவயதில் நடிகை ஸ்ரேயாவின் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.