2022 இல் நிறைய தமிழ் திரைப்படங்கள் வெளியாகின.பொதுவாக ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் நல்ல வரவேற்பு பெரும். அவர்களுக்கென ரசிகர்கள் இருப்பதால் விளம்பரம் இல்லாமல் தியேட்டரில் கூட்டம் இருக்கும். ஆனால் மற்ற நடிகர்கள் மற்றும் புதிய இயக்குனர்கள் எடுத்த படம் நன்றாக இருந்தால் மட்டும் தான் ரசிகர்கள் செல்வார்கள். அப்படி இந்த வருடம் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான படங்கள் நல்ல வசூல் செய்தனர். இப்படி ஹிட் ஆகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த படங்கள் தொகுப்பு இது.
லவ் டுடே :வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படம் கடந்த 2019-ல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். முன்பு வந்த படங்களை போல் இல்லாமல், புதிய கதைக் களத்தில் கோமாளி படம் ரசிகர்களை கவர்ந்தது.பிரதீப் இயக்கி நடித்து யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான லவ் டுடே திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. காதலை மையமாக கொண்டு காமெடி ஜானரில் உருவான இந்தப் படம் பெரும்பாலான ரசிகர்களை திருப்தி அடையச் செய்தது.இவானா, சத்யராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த லவ் டுடே படத்தின் கலெக்சன் விபரம் வெளியாகி வசூல் வேட்டை பார்த்து கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சர்தார் : கார்த்தியுடன், லைலா, ராஷி கண்ணா, ரெஜிஷா விஜயன், ராமதாஸ், சிறுவன் ரித்விக் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.தண்ணீர் முதலாளித்துவ கட்டுப்பாடில் சென்றால் என்னவாகும்? அதனால் ஏற்படக்கூடிய ஆபத்து மற்றும் விளைவுகள் என்னென்ன? பாட்டில் தண்ணீரால் கேன்சர் உள்ளிட்ட கொடூர நோய்கள் உருவாகுமா? இந்த கதைக்கும் இந்திய உளவாளிக்கும் இருக்கும் தொடர்பு என்ன? என்பதை விறு விறுப்பான திரைக்கதையில் கூறியுள்ளார் பி.எஸ்.மித்ரன். கைதி தீபாவளியை போல சர்தார் தீபாவளியும் கார்த்திக்கு சிறப்பாகவே அமைந்தது இந்த படம்.
திருச்சிற்றம்பலம்: நடிகர் தனுஷ் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து, நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.திருச்சிற்றம்பலம் படத்தில் சண்டைக்காட்சிகள் கிடையாது. அழகான ஒளிப்பதிவும், பாடல்களும் ரசிக்க வைக்கின்றன.வழக்கமான கதையை சுவாரஸ்யமாக எடுத்து ஒரு Feel Good Movie என சொல்ல வைத்துள்ளார் இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவகர்.
டான் : சிபி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் எஸ் ஜே சூர்யா சமுத்திரக்கனி பிரியங்கா மோகன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து இன்று திரைக்கு வந்துள்ள டான் திரைப்படம், கல்லூரி கலாட்டா திரைப்படமாக மட்டுமல்லாமல் ரசிகர்களை திரையரங்கில் கண்ணீர் விட்டு அழ செய்யும் அப்பா-மகன் செண்டிமெண்ட் திரைப்படமாகவும் உருவாகி உள்ளது.ஒட்டுமொத்தமாக சிவகார்த்திகேயன் திரைவாழ்க்கையில் மற்றும் ஒரு வெற்றித் திரைப்படமாக மாறியுள்ள டான் திரைப்படம்.
கட்டா குஸ்தி: விஷ்ணு விஷால், ஐஷ்வர்ய லெட்சுமி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் கட்டா குஸ்தி. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. செல்லா அய்யாவு இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு ரிச்சர்டு நாதன், எடிட்டிங் ஜி.கே. பிரசன்னா, கலை உமேஷ் குமார், சண்டை காட்சிகள் அன்பறிவு, நடனம் பிருந்தா தினேஷ் சாண்டி.விஷ்ணு விஷால் – ரவிதேஜா இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட்டுள்ளது.
கார்கி: சாய் பல்லவி நடிப்பில் கவுதம் ராமச்சந்திரன் இயக்கியிருக்கும் திரைப்படம் கார்கி. இந்தப் படத்தில் சாய் பல்லவி பள்ளி ஆசிரியராக வருகிறார். அவரின் தந்தை ஒரு அப்பார்ட்மெண்டில் Securityஆக பணி புரிகிறார். அந்த அப்பார்ட்மெண்டில் வசிக்கும் ஒரு சிறுமி, 4 வட மாநிலத்தவர்களால் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளக்கப்படுகிறாள். அதில் 5-வதாக சாய் பல்லவியின் தந்தையும் கைது செய்யப்படுகிறார். தன் தந்தை அப்பாவி, அவரை வெளியே எடுக்க வேண்டும் என்ற கார்கி கதாபாத்திரத்தின் முயச்சியே இந்த திரைப்படம்.பல்வேறு முக்கிய நட்சத்திரங்கள் பாராட்டியுள்ள படம் ,ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றது.