வினோத் ராஜ் இயக்கிய கூழாங்கல் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு பின்னர் போட்டியிலிருந்து வெளியேறியது. மடோனா அஸ்வினின் மண்டேலா ஒரு வாக்கு எத்தனை பலம் கொண்டது என்பதை காட்டியிருந்தது. பிராங்க்ளின் இயக்கிய ரைட்டர் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் சிறந்த புதுமுக இயக்குநராக 4-வது இடத்தைப்பிடித்துள்ளார். கடைசீல பிரியாணி பட இயக்குநர் நிஷாந்த் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளார்.