நடிகர், நடிகைகள் என்றால் எதாவது ஒரு மொழியில் தான் டாப்பில் இருப்பார்கள்.ஒரு சிலர் மட்டுமே எல்லா மொழியிலும் ரசிகர்களை கட்டி வைத்திருப்பார்கள். அப்படி ஒருவர் தான் சமந்தா. தெலுங்கு, தமிழ் இரண்டிலும் சமந்தா டாப்பில் இருக்கிறார். ஹிந்தியில் இதுவரை ஒரு படம் கூட நடிக்கவில்லை என்றாலும் சமந்தாவுக்கு எக்கசக்க ரசிகர்கள். சமந்தா 2022 -ல் பல சவாலான விஷயங்களை எதிர்கொண்டுள்ளார்.
சமந்தா - நாக சைதன்யா பிரிவு : சமந்தா நாக சைதன்யாவை பிரிவதாக 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவித்திருந்தார். ஆனால் அந்த சோகத்திலிருந்து மீள 2022 ஆம் ஆண்டு வரை நேரம் எடுத்துக்கொண்டார். நாக சைதன்யா உடனான பிரிவுக்கு பிறகு மனம் உடைந்துவிட்டதாகவும், அதிலிருந்து நண்பர்கள் உதவியுடன் மீண்டு வந்தேன் என பல பேட்டிகளில் கூறியுள்ளார்.
ஓ சொல்றியா மாமா ஹிட் : அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இந்த படத்தில் இடம்பெற்ற ‘ஓ சொல்றியா’ பாடலில் சிறப்பு தோற்றத்தில் சமந்தா நடனமாடியிருப்பார். இந்த பாடல் மிகப்பெரிய ஹிட்டானது. 2021 ஆம் ஆண்டு இறுதியில் இந்த பாடல் வெளியானதால் இதன் வெற்றியை 2022-யிலேயே கொண்டாடினார்கள். இந்த பாடல் மூலம் சமந்தா பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார்.
காத்து வாக்குல ரெண்டு காதல் ரிலீஸ் : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமந்தா, நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் காத்து வாக்குல இரண்டு காதல் படம் வெளியானது. 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு சமந்தா நடிப்பில் தமிழில் வெளியான படம் என்பதால் சமந்தா ரசிகர்களுக்கு இது ஸ்பெஷலான படமாகும். இந்த படத்தில் சமந்தா நடித்த கதீஜா கதாபாத்திரம் வேற லெவல் வரவேற்பை பெற்றது.
முதன்முறையாக மனம் திறந்த சமந்தா : யசோதா படத்திற்கு கையில் ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டே டப்பிங் செய்யும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அப்போது தான் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக முதன் முறையாக கூறினார். இந்த செய்தி பேர் அதிர்ச்சியாக இருந்தது. இந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைய சிகிச்சை எடுத்து வருவதாக கூறியிருந்தார்.
கண்கலங்கிய சமந்தா : யசோதா படத்தின் ப்ரமோஷன் போது சமந்தா தனது உடல் நிலை குறித்து பேசிய போது கண்கலங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் சமந்தா உயர் சிகிச்சைக்காக வட கொரியா செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. 2022 ஆம் ஆண்டு சமந்தா அளவில்லாத வெற்றிகளையும், ஏற்றுக்கொள்ள முடியாத கஷ்டங்களையும் அனுபவித்துள்ளார்.