முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » விவேக் முதல் புனித் ராஜ்குமார் வரை.. 2021ல் உயிரிழந்த தென்னிந்திய திரைப் பிரபலங்கள்..

விவேக் முதல் புனித் ராஜ்குமார் வரை.. 2021ல் உயிரிழந்த தென்னிந்திய திரைப் பிரபலங்கள்..

Year Ender 2021 : 2021-ல் நாம் இழந்த சில முக்கிய திரைத்துறை ஆளுமைகளை இங்கே பார்க்கலாம்.

  • 18

    விவேக் முதல் புனித் ராஜ்குமார் வரை.. 2021ல் உயிரிழந்த தென்னிந்திய திரைப் பிரபலங்கள்..

    2022-ஆம் ஆண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், நடந்து கொண்டிருக்கும் 2021-ஆம் ஆண்டு தென்னிந்திய திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்தது. ஏனென்றால் தென்னிந்திய மொழிகளான் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைத்துறையில் பங்களித்த பிரபல நடிகர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் இவ்வுலகை விட்டு மறைந்தனர். 2021-ல் நாம் இழந்த சில முக்கிய திரைத்துறை ஆளுமைகளை இங்கே பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 28

    விவேக் முதல் புனித் ராஜ்குமார் வரை.. 2021ல் உயிரிழந்த தென்னிந்திய திரைப் பிரபலங்கள்..

    புனித் ராஜ்குமார்: கன்னட திரையுலகின் அபிமான சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த 46 வயதேயான புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் 29-ம் தேதி பெங்களூருவில் மரணமடைந்தது நாடு முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் மற்றும் மக்களை பெரும் அதிர்ச்சியடைய வைத்தது. அவரை அப்பு என்று அன்புடன் அழைத்தனர் ரசிகர்கள். ஜிம்மில் புனித் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட புனித் ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது திடீர் மரணம் கன்னட ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து திரை துறையினரையும் அதிர வைத்தது. மரணத்திற்குப் பின் கர்நாடக மாநிலத்தின் உயரிய விருதான கர்நாடக ரத்னா விருது அப்புவுக்கு வழங்கப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 38

    விவேக் முதல் புனித் ராஜ்குமார் வரை.. 2021ல் உயிரிழந்த தென்னிந்திய திரைப் பிரபலங்கள்..

    விவேக்: சின்ன கலைவாணர் என்று அழைக்கப்பட்ட விவேக்கை கடந்த ஏப்ரல் 17 இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்தது பலரையும் நம்ப முடியாத அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஏனென்றால் இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னர் தான் அரசு மருத்துவமனையில் கொரோன தடுப்பூசி போட்டு கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏறபடுத்தினார். ஊடங்கங்களிடம் பேட்டியும் கொடுத்தார். விவேக்கிற்கு சென்னையில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது. பத்மஸ்ரீ விருதை வென்றுள்ள விவேக், மறைந்த ஐயா அப்துல்கலாமின் கோடி மரங்கள் நடும் கனவை நனவாக்கி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

    MORE
    GALLERIES

  • 48

    விவேக் முதல் புனித் ராஜ்குமார் வரை.. 2021ல் உயிரிழந்த தென்னிந்திய திரைப் பிரபலங்கள்..

    சித்ரா:  1980-களில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தவர் சித்ரா. சேரன் பாண்டியன் திரைப்படத்தில் நடிகர் சரத்குமாரின் தங்கையாக நடித்து மிகவும் பிரபலமானார். தொடர்ந்து சினிமா, சீரியல்களில் நடித்தார். நல்லெண்ணய் விளம்பரம் ஒன்றில் நடித்ததால் நல்லெண்ணய் சித்ராவாகவே பின்னர் குறிப்பிடப்பட்டார். கேரளாவை பூர்விகமாக கொண்ட சித்ரா, மலையாள மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சென்னையில் கணவர் மற்றும் மகளுடன் வசித்துவந்த சித்ரா கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

    MORE
    GALLERIES

  • 58

    விவேக் முதல் புனித் ராஜ்குமார் வரை.. 2021ல் உயிரிழந்த தென்னிந்திய திரைப் பிரபலங்கள்..

    நடிகை ஜெயந்தி: பழம்பெரும் நடிகை ஜெயந்தி கடந்த ஜூலை 26-ல் தேதி பெங்களூருவில் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்தவர் ஜெயந்தி. 1960-ல் வெள்ளித்திரைக்கு வந்த நடிகை ஜெயந்தி 1980-கள் வரை முன்னணி நடிகையாக இருந்தர். சுமார் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் 6 முறை மாநில அரசுகளின் விருதுகளை பெற்றுள்ளார். தவிர மதிப்புமிக்க விருதான டாக்டர் ராஜ்குமார் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 68

    விவேக் முதல் புனித் ராஜ்குமார் வரை.. 2021ல் உயிரிழந்த தென்னிந்திய திரைப் பிரபலங்கள்..

    சீதாராம சாஸ்திரி: Sirivennela Seetharama Sastry என்பது இவரது முழுப்பெயர். தெலுங்குத் திரையுலகில் புகழ்பெற்ற பாடலாசிரியராக இருந்த இவர் கடந்த நவம்பர் 20 அன்று உயிரிழந்தார். பழம்பெரும் பாடலாசிரியர் மற்றும் கவிஞரான இவர் தெலுங்கு சினிமா மற்றும் இந்திய திரையுலகில் மிகவும் மரியாதைக்குரிய இடத்தைப் பெற்றுள்ளார். நுரையீரல் புற்றுநோய் தொடர்பான சிக்கல்கள் காரணமாக அவர் ஹைதராபாத்தில் காலமானார்.

    MORE
    GALLERIES

  • 78

    விவேக் முதல் புனித் ராஜ்குமார் வரை.. 2021ல் உயிரிழந்த தென்னிந்திய திரைப் பிரபலங்கள்..

    சிவசங்கர் மாஸ்டர்: தமிழ் மற்றும் தெலுங்கில் புகழ்பெற்ற நடன இயக்குனரான சிவசங்கர் மாஸ்டர் கோவிட் 19 தொடர்பான சிக்கல்களால் ஹைதராபாத் மருத்துவமனை ஒன்றில் கடந்த நவம்பர் 28 அன்று இறந்தார். சிரஞ்சீவி, சரத்குமார் மற்றும் விஜயகாந்த் போன்ற பல சூப்பர் ஸ்டார்களுடன் பணிபுரிந்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 88

    விவேக் முதல் புனித் ராஜ்குமார் வரை.. 2021ல் உயிரிழந்த தென்னிந்திய திரைப் பிரபலங்கள்..

    மகேஷ் கோனேரு : பிரபல தயாரிப்பாளர் மகேஷ் கோனேரு அக்டோபர் 12-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் மாரடைப்பு ஏற்பட்து காலமானார். இவர் ஒரு திரைப்பட தயாரிப்பாளராக மாறுவதற்கு முன்பு ஒரு விளம்பரதாரராக இருந்தார். அவரது தயாரிப்புகளில் '118' மற்றும் 'மிஸ் இந்தியா' போன்ற படங்கள் அடங்கும். இவர்களை தவிர பிஆர்ஓ பிஏ ராஜு, நடிகை சரண்யா சசி, நடிகர்கள் ராஜா பாபு, பி பாலச்சந்திரன், பிசி ஜார்ஜ், பொட்டி வீரா, நாகையா மற்றும் நெடுமுனி வேணு உள்ளிட்ட பலரும் இந்த ஆண்டு உலகை விட்டு பிரிந்தனர்.

    MORE
    GALLERIES