தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய இருவரைப் பற்றி, குற்றவாளிகளின் முதலாளியாக இருந்த டான் கரீம் லாலாவிடெமே முறையிட்டு, கரீம் லாலாவின் தங்கையாக இருந்து, மும்பை காமாட்டிபுராவையே தனது கைப்பிடிக்குள் வைத்திருந்த கங்குபாய் கொத்தேவாலிதான், அலியா பட்டின் கங்குபாய் கதியாவாடி திரைப்படத்தின் இன்பிரேஷன். பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் போன்ற படங்களை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலியின் படைப்பு என்பதால் மிகுந்த எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.