ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » விஜய்யா, அஜித்தா யார் பெரிய ஸ்டார் என அடித்துக் கொள்ளும் நெட்டிசன்கள்!

விஜய்யா, அஜித்தா யார் பெரிய ஸ்டார் என அடித்துக் கொள்ளும் நெட்டிசன்கள்!

சரி, விஜய்யா, அஜித்தா யார் மாஸ்? சேட்டிலைட், டிஜிட்டல், ஓடிடி வியாபாரத்தை பொறுத்தவரை விஜய்யே நூலிழையில் முன்னணியில் இருக்கிறார். அதேபோல் கேரளா, தெலுங்கு வியாபாரத்திலும் அவரே முதலில் உள்ளார். தமிழகத்தில் ஓபனிங் வசூலில் 5 வருடங்களுக்கு முன்புவரை விஜய்யே முன்னிலையில் இருந்தார். இப்போது அஜித்தின் ரசிகர்கள்வட்டம் அதிகரித்து, அவரது படங்களும் விஜய் படங்களுக்கு இணையாக ஓபனிங்கை பெறுகின்றன.

 • News18
 • 19

  விஜய்யா, அஜித்தா யார் பெரிய ஸ்டார் என அடித்துக் கொள்ளும் நெட்டிசன்கள்!

  நீ பற்ற வைத்த நெருப்பொன்று... என்ற வசனம் இன்றைய தேதியில் தில் ராஜுவுக்கே பொருந்தும். வரும் பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு படங்கள் வரவிருக்கும் நிலையில், துணிவு படத்தின் விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. ஆகவே, அதிக திரையரங்குகள் துணிவு படத்திற்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் உலவுகின்றன. ஆனால், துணிவு படத்துக்காக இதுவரை திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என சுப்பிரமணியம் போன்றவர்கள் கூறி வருகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 29

  விஜய்யா, அஜித்தா யார் பெரிய ஸ்டார் என அடித்துக் கொள்ளும் நெட்டிசன்கள்!

  விஜய்யா, அஜித்தா என்று இருவரது ரசிகர்களும் இணையத்தில் அடித்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் விஜய்தான் அஜித்தைவிட பெரிய ஸ்டார். வாரிசு, துணிவு படங்களுக்கு சரிசமமாக திரையரங்குகள் ஒதுக்கியிருக்கிறார்கள். வாரிசுக்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கும்படி உதயநிதியை கேட்கப் போகிறேன் என ஆந்திராவிலிருந்து வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு பேட்டி தந்தார். இது திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 39

  விஜய்யா, அஜித்தா யார் பெரிய ஸ்டார் என அடித்துக் கொள்ளும் நெட்டிசன்கள்!

  விஜய், அஜித்துக்கு சரியளவில் ரசிகர்கள் உள்ளனர். இருவரது ஸ்டார் பவரும் கிட்டத்தட்ட ஒன்றுதான். அப்படியிருக்கையில் ஒருவரை மட்டம்தட்டி இன்னொருவரை உயர்த்துவது தொழில்ரீதியாக சரியானது அல்ல. இதே தில் ராஜு, ராம் சரணைவிட ஜுனியர் என்டிஆர் பெரிய ஸ்டார் என்று பேட்டித்தர முடியுமா? அப்படி சொல்லிவிட்டு தெலுங்கு மாநிலத்தில் நிம்மதியாக இருந்துவிட முடியுமா?.அந்த யதார்த்தத்தை உணராமல் தெலுங்கு தயாரிப்பாளர் என்பதால் தமிழ்ப்பட நடிகர்கள் குறித்து அதிகப்பிரசங்கித்தனமாக அவர் நம்பர் ஒன், இவர் நம்பர் டூ என எண் விளையாட்டில் இறங்கியது கண்டிக்ககத்தக்கது.

  MORE
  GALLERIES

 • 49

  விஜய்யா, அஜித்தா யார் பெரிய ஸ்டார் என அடித்துக் கொள்ளும் நெட்டிசன்கள்!

  தில் ராஜின் பேட்டியைத் தொடர்ந்து, விஜய், அஜித் இருவரில் யார் தெலுங்கில் ஆதிக்கம் செலுத்துகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 1996 வெளியான அஜித்தின் காதல்கோட்டை ஆந்திராவில் 100 நாள்கள் ஷிப்டிங் இல்லாமல் ஓடியது, தமிழ்நாட்டிலும் அப்படம் வெள்ளிவிழா கண்டது என அஜித் ரசிகர்கள் கோஷமிட, காதல்கோட்டைக்கு முன்பு விஜய்யின் பூவே உனக்காக 250 நாள்கள் ஓடியது, 1994 விஜய்யின் ரசிகன் படம் தமிழகத்தில் வெள்ளிவிழா கொண்டாடியது, மேலும், தெலுங்கில் இன்றைய தேதியில் அஜித் படத்தைவிட, விஜய் படத்துக்கே அதிக பணம் தரப்படுகிறது என பதிலடி கொடுத்துள்ளனர். இதில் ரசிகன் திரைப்படம் சென்னையில் 147 மட்டுமே ஓடியது என்பது ஒருசாராரின்வாதம்.  அதேபோல் 1995 இல் வெளியான அஜித்தின் ஆசை பூவே உனக்காக படத்துக்கு முன்பே வெள்ளி விழா கண்டது.

  MORE
  GALLERIES

 • 59

  விஜய்யா, அஜித்தா யார் பெரிய ஸ்டார் என அடித்துக் கொள்ளும் நெட்டிசன்கள்!

  தில் ராஜு பற்ற வைத்த நெருப்பு, அதிக 100 நாள், வெள்ளிவிழா படங்கள் தந்தது யார் என்ற போட்டியில் வந்து நிற்கிறது.  ரசிகர்களின் இந்தப் போட்டியை சகித்துக்கொள்ளலாம். இதனை முன்வைத்து பத்திரிகையாளர்களும், சினிமாவுக்கு சம்பந்தமில்லாதவர்களும் செய்யும் வேடிக்கை வினோதங்கள் எரிச்சலூட்டுபவை. தில் ராஜுவின் அதிகப்பிரசங்கித்தனமான பேச்சே இந்த சர்ச்சைக்கு காரணம். உண்மை எது என்று அறியாமல் வாயைவிடுவது. நேற்றைய தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் ஒரு பெண் பத்திரிகையாளர், விஜய் ஒவ்வொரு படத்துக்கும் ஏதாவது சர்ச்சையை கிளப்பிவிடுகிறார் என்றார். படத்திற்கு விளம்பரம் கிடைக்க அவர் இப்படி செய்வதாகவும் கூறினார். அதாவது தில் ராஜுவின் பேச்சுக்கான கிரெடிட்டை விஜய் கேட்காமலே அவரது தலையில் ஏற்றி வைத்தார். அதேபோல், தெலுங்குப் படங்களுக்கே சங்கராந்தியின் போது முன்னுரிமை தருவோம், வாரிசை வெளியிட மாட்டோம் என்று தெலுங்கு தயாரிப்பாளர்கள் எடுத்த முடிவும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சையும்கூட வாரிசு படத்தின் விளம்பரத்துக்காக விஜய்யே செய்தது என்ற தொனியில் பேசினார். இவர்களைப் போன்ற வதந்தி ப்ரியர்களால்தான் தேவையில்லாத விவாதங்கள் அரங்கேறுகின்றன.

  MORE
  GALLERIES

 • 69

  விஜய்யா, அஜித்தா யார் பெரிய ஸ்டார் என அடித்துக் கொள்ளும் நெட்டிசன்கள்!

  அதேபோல், ஒரு படம் மக்களுக்குப் பிடித்து, வெற்றி பெற்றால், அந்தப் படத்தின் ஹீரோதான் அப்போதைக்கு நம்பர் ஒன், இன்றைய தேதியில் லவ் டுடே படத்தின் ஹீரோதான் நம்பர் ஒன் என்றனர்.

  MORE
  GALLERIES

 • 79

  விஜய்யா, அஜித்தா யார் பெரிய ஸ்டார் என அடித்துக் கொள்ளும் நெட்டிசன்கள்!

  லவ் டுடே படம் வெற்றி பெற்றது என்பதால் அந்தப் படத்தின் ஹீரோவுக்கு அடுத்தப் படத்தில் அள்ளி கொடுத்துவிட மாட்டார்கள். அவரது ஒரேயொரு படம் தோல்வியடைந்தாலும் அதற்கடுத்தப் படத்தின் சேட்டிலைட், டிஜிட்டல் உரிமைகளை யாரும் சீண்ட மாட்டார்கள். ஆனால் ரஜினி, விஜய், அஜித் படங்களின் நிலை அதுவல்ல. அவர்களின் இந்தி சேட்டிலைட், டிஜிட்டல் உரிமைகள் குறைந்தபட்சம் 25 கோடிகளுக்கு விலை போகிறது. பீஸ்ட் படம் சரியாகப் போகவில்லை என்பதால் வாரிசுக்கு இந்தத் தொகையை குறைத்து கேட்கப் போவதில்லை. பீஸ்டைவிட அதிகத் தொகைக்கே வாரிசு படத்தின் உரிமைகள் கேட்கப்படுகின்றன. அனைத்து மொழிகளின் ஆடியோ, சேட்டிலைட், டிஜிட்டல், ஓடிடி உரிமைகளின் வழியாக இந்த ஸ்டார்களின் படங்கள் ஒவ்வொன்றும் 70 கோடிகளுக்கு மேல் வசூலிக்கின்றன. இது இந்த நடிகர்களுக்கு மட்டுமேயான வியாபாரம். இதன் காரணமாகத்தான் திரையரங்குகளில் பெரிய வசூலை இவர்களின் படங்கள் பெறாத போதும் இவர்களின் சம்பளம் குறைவதில்லை. இது மாஸ் நடிகர்களுக்கு மட்டுமேயான வியாபாரம். இதனை கணக்கில் கொள்ளாமல் ஏதோ ஒரு நடிகரின் ஏதோ ஒரு படம் வசூலித்தது என்றதும் அவரை இந்த மாஸ் நடிகர்களுடன் - வியாபாரரீதியாக ஒப்பிடுவது அபத்தம்.

  MORE
  GALLERIES

 • 89

  விஜய்யா, அஜித்தா யார் பெரிய ஸ்டார் என அடித்துக் கொள்ளும் நெட்டிசன்கள்!

  சரி, விஜய்யா, அஜித்தா யார் மாஸ்? சேட்டிலைட், டிஜிட்டல், ஓடிடி வியாபாரத்தை பொறுத்தவரை விஜய்யே நூலிழையில் முன்னணியில் இருக்கிறார். அதேபோல் கேரளா, தெலுங்கு வியாபாரத்திலும் அவரே முதலில் உள்ளார். தமிழகத்தில் ஓபனிங் வசூலில் 5 வருடங்களுக்கு முன்புவரை விஜய்யே முன்னிலையில் இருந்தார். இப்போது அஜித்தின் ரசிகர்கள்வட்டம் அதிகரித்து, அவரது படங்களும் விஜய் படங்களுக்கு இணையாக ஓபனிங்கை பெறுகின்றன. விஸ்வாசம் போல் மக்களுக்குப் பிடித்திருந்தால் வசூல்சாதனையே புhpயும். எனினும் முதல்நாள் வசூல், முதல்வார வசூல், ஒட்டு மொத்த வசூல் போன்றவற்றில் சில கோடிகள் வித்தியாசத்தில் விஜய் படங்களே இப்போதும் முன்னிலையில் உள்ளன. ஆனால், எப்போது வேண்டுமானாலும் அஜித் படங்கள் இதனை தாண்டிச் செல்லும் சாத்தியம் உள்ளது.

  MORE
  GALLERIES

 • 99

  விஜய்யா, அஜித்தா யார் பெரிய ஸ்டார் என அடித்துக் கொள்ளும் நெட்டிசன்கள்!

  வசூல் விவரங்கள் அடிப்படையில் ரசிகர்கள், விமர்சகர்கள் இவர்தான் இவரைவிட முன்னிலையில் இருக்கிறார் என சொல்லலாம், தவறில்லை. நடிகர்களை வைத்து வியாபாரம் செய்யும் ஒருவர் ஒருவரை உயர்த்தியும், இன்னொருவரை மட்டம் தட்டியும் பேசுவது அவரது தொழிலுக்கு அழகல்ல.

  MORE
  GALLERIES