முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » நடுரோட்டில் ரகளை.. கிரிக்கெட் வீரருடன் மல்லுக்கட்டிய நடிகை.. யார் இந்த இன்ஸ்டா மாடல்?

நடுரோட்டில் ரகளை.. கிரிக்கெட் வீரருடன் மல்லுக்கட்டிய நடிகை.. யார் இந்த இன்ஸ்டா மாடல்?

இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா மீது தாக்குதல் நடத்திய புகாரில் நடிகை ஸ்வப்னா கில் உள்ளிட்ட 8 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. ஸ்வப்னாவை கைது செய்து காவல்துறை விசாரித்துள்ளது.

  • 16

    நடுரோட்டில் ரகளை.. கிரிக்கெட் வீரருடன் மல்லுக்கட்டிய நடிகை.. யார் இந்த இன்ஸ்டா மாடல்?

    பிப்ரவரி 15ஆம் தேதி இரவு ப்ரித்வி ஷாவும் அவரது நண்பர்களும் மும்பையில் உள்ள சாண்டாக்ரூஸ் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு இரவு உணவிற்குச் சென்றனர். அப்போது அங்கு நண்பர்களுடன் வந்திருந்த நடிகை சப்னா கில் பிருத்வி ஷாவிடம் செல்ஃபிக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    MORE
    GALLERIES

  • 26

    நடுரோட்டில் ரகளை.. கிரிக்கெட் வீரருடன் மல்லுக்கட்டிய நடிகை.. யார் இந்த இன்ஸ்டா மாடல்?

    முதலில் ஓகே சொல்லி பிருத்வி ஷா சம்மதம் தெரிவித்தார். இருப்பினும், அவர்கள் மேலும் புகைப்படம் எடுத்துக்கொள்ள பிரித்வி ஷாவை வற்புறுத்தியதால் அதிருப்தி அடைந்த ஷா, மேனேஜரிடம் புகார் அளிக்க, ஹோட்டல் நிர்வாகத்தினர் அவர்களை ஹோட்டலை விட்டு வெளியேற்றியுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 36

    நடுரோட்டில் ரகளை.. கிரிக்கெட் வீரருடன் மல்லுக்கட்டிய நடிகை.. யார் இந்த இன்ஸ்டா மாடல்?

    இது சப்னா கில் தரப்பை ஆத்திரமூட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து பிருத்வி ஷா தனது நண்பருடன் ஹோட்டலை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது வெளியே காத்திருந்த சப்னா கில் மற்றும் அவரது நண்பர்கள் பிருத்வி ஷாவின் காரை துரத்திச் சென்று பேஸ்பால் மட்டையால் அவர்களது காரை அடித்து நொறுக்கினர்.

    MORE
    GALLERIES

  • 46

    நடுரோட்டில் ரகளை.. கிரிக்கெட் வீரருடன் மல்லுக்கட்டிய நடிகை.. யார் இந்த இன்ஸ்டா மாடல்?

    இதற்கிடையில், பிருத்வி ஷாவுக்கும் சப்னா கில்லுக்கும் இடையே கைகலப்பும் நடந்தது, இந்த வீடியோ வைரலாக பரவியது.இந்த சம்பவம் தொடர்பாக ஸ்வப்னா கில் உள்ளிட்ட 8 பேர் மீது மும்பை ஓஷிவாரா காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. அவர்களை கைது செய்து விசாரணை நடத்தியது.

    MORE
    GALLERIES

  • 56

    நடுரோட்டில் ரகளை.. கிரிக்கெட் வீரருடன் மல்லுக்கட்டிய நடிகை.. யார் இந்த இன்ஸ்டா மாடல்?

    சம்பவத்தில் ஈடுபட்ட சப்னா கில் சண்டிகரை சேர்ந்தவர். மாடலிங் துறையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் இவர் சமூக ஊடகங்களில் நல்ல செல்வாக்கு கொண்டவர். இன்ஸ்டாகிராமில் ஸ்வப்னாவை 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கிறார்கள்.இவர் தனது சமூக வலைத்தளத்தில் நடன வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். குறிப்பாக ஸ்னாப்சாட், யூடியூப், ஜோஷ் போன்ற வீடியோ வலைத்தளங்களிலும் தீவிரமாக இயங்கி வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 66

    நடுரோட்டில் ரகளை.. கிரிக்கெட் வீரருடன் மல்லுக்கட்டிய நடிகை.. யார் இந்த இன்ஸ்டா மாடல்?

    போஜ்பூரி திரைப்படங்கள் மூலம் திரைத்துறையில் அறிமுகமான ஸ்வப்னா, பிரபல போஜ்பூரி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.காசி அமர்நாத், நிர்ஹுவா சலால் லண்டன், மேரா வதன் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார்.

    MORE
    GALLERIES