குத்து விளக்கிற்கு பூ வைத்து பூஜையை ஆரம்பிக்கும் முத்து. எண்ணெய் பாட்டிலை தவறாக திறந்து எண்ணெயை சட்டையில் ஊற்றி விடுகிறார். நாளும் நேரமும் இல்லாததால் சிம்பிளாக பால் காய்ச்சுகிறோம் என்று ஜி.பி. முத்து வீடியோவில் கூறியுள்ளார். ஆரத்தி காட்டும் ஜி.பி. முத்து சமையல் அறைக்கு தீபம் காட்டுகிறார். மின்சார அடுப்பில் பால் காய்ச்சும் ஜிபி முத்து. பட்டனை மாற்றி அழுத்தினால் வெடித்து விடும் என்று அங்கிருந்தவர்களை முத்துவை எச்சரித்தனர். காய்ச்சிய பாலை குடும்பத்தினருக்கு வழங்க தயாராகும் ஜிபி முத்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று முத்து கேட்க, பாலை தலையில் ஊற்ற வேண்டும் என்று கூறி நண்பர்கள் கிண்டல் செய்தனர். அதற்கு ஜிபி முத்துவின் ரியாக்சன். குடும்பத்துடன் சாமி கும்பிடும் ஜிபி முத்து மகளுக்கு இனிப்பு ஊட்டும் முத்து பாலுக்கு முன்பாக ஸ்வீட்டை கொடுத்த ஜிபி முத்துவுக்கு திட்டு விழுந்தது. குடும்பத்தினருடன் ஜி.பி.முத்து. பூஜை ஹாலில் நடந்துள்ளது. 2 ரூம், கிச்சன், ஹாலை கொண்டதாக ஜி.பி.முத்து வீடு கட்டப்பட்டுள்ளது.