தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் விஜயுடன் வாரிசு படத்தில் நடித்து ட்ரெண்டிங்கில் உள்ளார். இந்நிலையில் அவர் குறித்த முணுமுணுப்புகளும் இணையத்தில் அதிகரித்து வருகின்றன.
2/ 7
2016 இல் கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமான இவர் சரீலேனு நீக்கெவரு, சலோ, தேவதாஸ், பீஷ்மா, புஷ்பா, சீதா ராமம் உள்ளிட்ட படங்களின் மூலம் தென்னிந்திய ஹீரோயின்கள் பட்டியலில் டாப் 10 களுக்கு வளர்த்துள்ளார்.
3/ 7
இதனிடையே அடுத்தடுத்து கீதா கோவிந்தம், dear காம்ரேட் என இரண்டு ஹிட் படங்களில் ராஷ்மிகா மற்றும் விஜய் விஜய் தேவரகொண்டாசேர்ந்து நடித்து ட்ரெண்டிங் ஆனது, இந்த இணை காதலில் இருப்பதாக பரவலாக முணுமுணுக்கப்பட்டு வருகிறது. ஆனால் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று இருவரும் தெரிவித்து வந்தனர்..
4/ 7
இந்நிலையில் 2023 புத்தாண்டு சமயத்தில் இருவரும் மாலத்தீவில் இருக்கும்படியான தனித்தனியாக புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர். ஒரே சமயத்தில் இருவரும் மாலத்தீவு படங்களை வெளியிட்டதால், இருவரும் சேர்ந்து மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளதாக பேசப்பட்டது. ஆனால் அவர்கள் அதற்கு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
5/ 7
இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், "சமீபகாலமாக சமூக வலைதளங்களில் என் மீது அவதூறு செய்வது அதிகமாகிவிட்டது. சிறு வயது முதலே ஹாஸ்டலில் தங்கி படித்தேன். பள்ளியில் அதிகமாக யாரோடும் சேரமாட்டேன். அதனால் நிறைய பேர் எனக்கு திமிர் என்று தவறாக புரிந்து கொண்டார்கள்.
6/ 7
அறையில் தனியாக உட்கார்ந்து அழுத நாட்கள் கூட உண்டு. வாழ்க்கையில் இன்னும் நிறைய தூரம் பயணம் செய்ய வேண்டியது இருக்கிறது. இந்த சிறிய பிரச்சினைக்கு நீ இப்படி இடிந்து போய்விட்டால் எப்படி என்று அம்மா சொன்ன வார்த்தைகள் எனக்குள் தன்னம்பிக்கையை வளர்த்தன.
7/ 7
ஒரு எல்லை வரை காத்திருப்பேன். எல்லை தாண்டினால் யாராக இருந்தாலும் சரி எதிர்த்து பதிலடி கொடுப்பேன். மேலும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக விஜய் தேவரகொண்டா எனது நண்பர். அவரோடு 'டூர்' சென்றால் தவறு என்ன?'' என்றார்