நடிகர்-திரைப்பட இயக்குநர்-தயாரிப்பாளர் விசு, பன்முகத் திறமை கொண்ட நட்சத்திரமாக திகழ்ந்தார். பழம்பெரும் இயக்குனர் கே.பாலச்சந்தரிடம் உதவியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 'கண்மணி பூங்கா' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விசு, சுமார் நாற்பது ஆண்டுகளாக தனது திரையுலக வாழ்க்கையில், குடும்பங்களை மையப்படுத்திய படங்களின் மூலம், ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். அவரின் 77-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில், சமூகத்தின் பிரச்சனைகளை பிரதிபலிக்கும், மதிப்புமிக்க வாழ்க்கை பாடங்களை வழங்கும் நோக்கத்தில் அவர் இயக்கிய 5 படங்களை இங்கே குறிப்பிடுகிறோம்.
சம்சாரம் அது மின்சாரம் : 'சம்சாரம் அது மின்சாரம்' கூட்டுக் குடும்பத்தின் கதையைச் சொல்கிறது. குடும்ப உறுப்பினர்களுக்கு எந்த மாதிரியான பிணைப்பு இருக்க வேண்டும் என்பதையும், குடும்பத்தை சமநிலைப்படுத்துவதில் பெரியவர்களின் பொறுப்புகளையும் படம் ஆழமாக ஆராய்கிறது. விசு, லக்ஷ்மி, சந்திரசேகர், கிஷ்மு, ரகுவரன், டெல்லி கணேஷ், இளவரசி, மனோரமா, மாதுரி, கமலா கமேஷ், திலீப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம் 25 வாரங்களுக்கும் மேலாக திரையரங்குகளில் ஓடியது.
மணல் கயிறு: 'மணல் கயிறு' ஒரு இளைஞனைப் பற்றியது. தான் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணைப் பற்றி ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறான். இது குறித்த தெளிவான யோசனை இருந்தபோதிலும், அவன் தனது மாமாவால் ஏமாற்றப்பட்டு, அவனது எதிர்பார்ப்புகளுக்குப் பொருந்தாத ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான். எஸ்.வி.சேகர் மற்றும் சாந்தி கிருஷ்ணா ஆகியோர் இதில் முக்கிய வேடங்களில் நடித்தனர். இவர்களுடன் விசு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
வரவு நல்ல உறவு: ’வரவு நல்ல உறவு’ செல்வ செழிப்பைப் பற்றி வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்ட இரண்டு நண்பர்களைப் பற்றியது. இப்படத்தில் விசு, அன்னபூர்ணா, ரேகா, வித்யாஸ்ரீ, கிஷ்மு, இளவரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் தமிழ்நாடு அரசின் மாநில விருதைப் பெற்றதோடு, பல தென்னிந்திய மொழிகளில் ரீமேக்கும் செய்யப்பட்டது.
நீங்க நல்லா இருக்கணும்: 'நீங்க நல்லா இருக்கணும்' விசுவின் இயக்கத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம். ஒரு குடிகார கணவனை நிதானமாக மாற்றும் மனைவியின் போராட்டத்தின் கதையை இப்படம் கூறுகிறது. இந்தப் பிரச்சினையை எதிர்கொண்ட பல குடும்பங்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதால், பார்வையாளர்கள் இத்திரைப்படத்துடன் மிகவும் இணைந்தனர். இதில் நிழல்கள் ரவி மற்றும் பானுப்ரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், விசு, சந்திரசேகர் மற்றும் மனோரமா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் சமூகப் பிரச்சினைகளுக்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது. மேலும் இது விசுவின் இரண்டாவது தேசிய விருதாகும்.