'நூறாவது நாள்', திரைப்படத்தின் வெற்றி சத்யராஜை முன்னனி நாயகர்களின் மெயின் வில்லனாக்கியது. நக்கல் நைய்யாண்டி மொழியுடன் கூடிய எள்ளல் தொனியில் சத்யராஜ் பேசும் வசனங்களுக்கு தனி ரசிக கூட்டமே உருவானது. 'தகடு தகடு', ….’என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறியே'…. 'என்னம்மா கண்ணு' போன்ற வசனங்கள் சத்யராஜின் ப்ரேண்டிங் வசனமாயின..
பாரதிராஜாவின் 'கடலோரக் கவிதைகள்' சத்யராஜுக்கு கதாநாயகன் அந்தஸ்தை கொடுத்தது. தாஸ் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் பச்சக்கென பதிந்தார் சத்யராஜ். முரட்டுத்தனம் ஆகட்டும் காதலில் உருகுவதாகட்டும் சரி...நடிப்பில் அசத்திய சத்யாராஜின் கேரக்டரை தமிழ் சினிமா புரிந்து அவரை வெற்றி நாயகனாக்கியது.
'என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு', 'பூவிழி வாசலிலே', 'பாலைவன ரோஜாக்கள்'…'அண்ணாநகர் முதல் தெரு', 'சின்னதம்பி பெரியதம்பி' உள்ளிட்ட பல திரைப்படங்களில் தன் தனித்துவ நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நாயகர்களின் வரிசையில் தனி இடம் பிடித்தார் சத்யராஜ். குறிப்பாக 'அமைதிப்படை' திரைப்படம் சத்யராஜின் ஹிட் படங்களின் வரிசையில் முதல் இடம் பிடித்தது.
'நண்பன்' …… 'தலைவா'.. 'ராஜா ராணி'.,.. 'சென்னை எக்ஸ்பிரஸ்'.. 'கடைக்குட்டி சிங்கம்'….., 'கனா உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் அடித்த சத்யராஜ் பாகுபலியில் கட்டப்பாவாக நடித்து ….’என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறியே'….என இந்திய ரசிகர்களுக்கும் சொல்லி மற்ற மொழிப் படங்களிலும் முத்திரை பதித்து வருகிறார்.