கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் மகான். இந்தப் படம் திரையரங்குகளுக்குப் பதில் ஓடிடியில் வெளியாகும் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
2/ 11
சின்ன பட்ஜெட் படங்கள் மட்டுமின்றி மகான் போன்ற பெரிய பட்ஜெட் படங்களும் அவ்வப்போது ஓடிடியில் வெளியாகி திரையரங்குகளுக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுக்கின்றன.
3/ 11
கார்த்திக் சுப்பாராஜின் முந்தைய படம் ஜகமே தந்திரம் ஓடிடியில் வெளியானது போல் மகானும் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.
4/ 11
மகானில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
5/ 11
இந்தியாவின் வட எல்லைப் பகுதிகளில் மகானின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டன.
6/ 11
துருவ் விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகள் பெரும்பாலும் டார்ஜிலிங்கில் படமாக்கப்பட்டன.
7/ 11
மகானுக்கு அனிருத்தை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்து, பிறகு அவரை நீக்கிவிட்டு சந்தோஷ் நாராயணனை ஒப்பந்தம் செய்தனர்.
8/ 11
மகானில் சிம்ரன் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ படத்தை தயாரித்துள்ளது.
9/ 11
வாணி போஜன், பாபி சிம்ஹா, சனத் ஆகியோரும் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர்.
10/ 11
மகான் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேரடியாக படத்தை ஓடிடியில் வெளியிடுகின்றனர்.
11/ 11
மகானின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வீடியோ வாங்கியுள்ளது. விரைவில் வெளியீட்டு தேதியை அறிவிக்க உள்ளனர்.