7. மேஜர் (இந்தி, தெலுங்கு): 2008 மும்பை தாக்குதலில் பலியான மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் வாழ்க்கையைத் தழுவி தெலுங்கு, இந்தியில் ஒரே நேரத்தில் மேஜர் திரைப்படம் எடுக்கப்பட்டது. அதிவி சேஷ் பிரதான வேடத்தில் நடித்ததோடு படத்தின் கதை, திரைக்கதையையும் எழுதியிருந்தார். சசி கிரண் டிக்கா இயக்கிய இந்தப் படம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களை பெற்றது.
6. ராக்கெட்ரி - தி நம்பி எபெக்ட் (தமிழ், இந்தி, ஆங்கிலம்): இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அந்நிய நாட்டுக்கு இந்திய நாட்டு ரகசியங்களை விற்றார் என கைது செய்யப்பட்டு, பல வருட சட்டப் போராட்டத்துக்குப் பின் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டார். அவரது வாழ்க்கைக் கதையை மாதவன் எழுதி, இயக்கி, நடித்தார். இயக்குனராக அவருக்கு இது முதல் படம்.
2. தி காஷ்மீர் பைல்ஸ் (இந்தி): காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து தி காஷ்மீர் பைல்ஸ் எடுக்கப்பட்டது. அரசின் தரவுகள் உள்பட எதையும் கணக்கில் கொள்ளாமல் முஸ்லீம் வெறுப்பை மட்டுமே பிரதானமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் இந்தியாவில் ஓடியது இந்த வருடத்தின் ஆகப்பெரும் துரதிர்ஷ்டம். இந்த உண்மையை இஸ்ரேலிய இயக்குனர் போட்டுடைத்தது ஒன்றே ஆறுதல்.