2022 தமிழ் சினிமாவுக்கு மகிழ்ச்சியான ஆண்டாக அமைந்ததுள்ளதில் எந்த சந்தேகமும் இல்லை. காரணம், பல வெற்றிப் படங்கள் இந்த ஆண்டின் முதல் பாதியில் வெளியாகியுள்ளன. அதில் பல முன்னணி ஹீரோக்களின் படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்க விஷயம். சரி, இந்த ஆண்டின் முதல் பாதியில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படங்களைப் பற்றி பார்ப்போம்.
கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய தமிழ் வெற்றிப்படமாக மாறியுள்ளது. இந்த ஆக்ஷன் படம் பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளைப் புரிந்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் உலகம் முழுவதும் ரூ 400 கோடிக்கு மேல் வசூல் செய்து ஐந்தாவது வாரத்தில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
ரசிகர்களை திருப்திப்படுத்த இயக்குனர் தவறியதால் விஜய் நடித்த 'பீஸ்ட்' கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சராசரி விமர்சனங்கள் இருந்தபோதிலும், விஜய் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றியைப் பெற்றார், மேலும் படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ரூ 250 கோடிகளை வசூலித்தது. ஆனால் ஒரு சில சென்டர்களில் படம் சரியாகப் போகாததால் தயாரிப்பாளர்களுக்கு பெரிய லாபம் கிடைக்காமல் போனது.
அஜித்தின் போலீஸ் படமான 'வலிமை' இந்த பிப்ரவரியில் வெளியானது. மேலும் படம் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு பெரிய திரைகளில் வந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஒரு பயங்கரமான தொடக்கத்தைப் பெற்றது. அதோடு ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்தது. படத்தின் OTT வெளியீட்டின் போது படத்தின் 200 கோடி சாதனையை தயாரிப்பாளர்களும் உறுதிப்படுத்தினர்.
பாண்டிராஜ் இயக்கிய 'எதற்கும் துணிந்தவன்' என்ற சமூக படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்தார். இந்தப் படம் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியானது. படத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து சூர்யா குரல் கொடுத்தார். படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. நட்சத்திரங்கள் நிறைந்த இப்படம் திரையரங்குகளில் 25 நாட்களுக்கு மேல் ஓடியது, மேலும் ரூ.160 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என அறிவிக்கப்பட்டது.
அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'டான்' திரைப்படம் இந்த மே மாதம் வெளியானது. இத்திரைப்படம் ஒரு இளைஞனின் கல்லூரி வாழ்க்கையை மையமாகக் கொண்டது. இப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாக ரூ.115 கோடிகளை வசூலித்தது. தவிர, ஒரு அறிமுக இயக்குனர் 100 கோடியை பெற்றது தமிழ் சினிமாவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.