தந்தையின் மறைவு குறித்து அஜித் மற்றும் அவரது சகோதரர்கள் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஈ.சி.ஆர் சாலையில் உள்ள நடிகர் அஜித்தின் இல்லத்திற்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஜித் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இதனைக் குறிப்பிட்டு சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வரும் இருவரது ரசிகர்கள், ஒருவரின் துயரத்தில் பங்கேற்பதே சிறந்த நட்பு என பாராட்டு தெரிவித்து வருகின்றனர்