ராஜஸ்தானில் திருமணக் கோலத்தில் இளம்பெண்கள் பல்வேறு கிராமங்களின் பொதுக் கழிப்பிடங்களில் சைனைட் உண்டு மரணிக்கின்றனர். அவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாததாலும், சைனைட் சாப்பிட்டதாலும் தற்கொலை என்ற ரீதியில் காவல்துறை வழக்கை முடித்து வைக்கின்றனர். இந்நிலையில், ஒரு பெண் காணாமல் போனதை விசாரிக்கும் பெண் காவல் அதிகாரி ஒருவர் தனது விசாரணையில் இந்தத் தொடர் மரணங்கள் நிகழ்ந்திருப்பதையும், அதை ஒரு சீரியல் கில்லர் செய்திருப்பதையும் கண்டுபிடிக்கிறார். இதில் பல்வேறு அரசியல் தலையீடுகளும் அவரது விசாரணையில் குறிக்கிடுகின்றன. இறுதியில் சீரியல் கில்லர் பிடிபட்டானா இல்லையா என்பது மீதிக்கதை.
ஒரு சீரியல் கில்லரைப் பிடிக்கும் த்ரில்லர் கதையில் இந்தியாவில் நிலவும் ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம், சாதிய வேறுபாடு, மதப் பாகுபாடு, வரதட்சணை ஆகியவற்றை நேரடியாக விமர்சித்திருக்கின்றனர் இயக்குநர்கள் ரீமா காக்தி (Reema Kagti), ஸோயா அக்தர் (Zoya Akhthar) ஆகியோர். கொலை செய்தவன் குற்றவாளியா, இந்த சமூகமே குற்றவாளிகளா என்று இறுதியாக கேள்வி எழுப்புகிறது ‘தஹாத்.