நடிகர் விஜய் சேதுபதி உடல் எடையைக் குறைத்து வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் லைக்ஸை குவித்து வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி கடைசியாக டிஎஸ்பி படத்தில் நடித்தார், இது பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடைந்தது. தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு செல்ஃபியை பகிர்ந்துள்ளார். உடனே அந்தப் படத்துக்கு லைக்ஸ் மழை பொழிய ஆரம்பித்தது. உடல் எடையைக் குறைத்து ஒல்லியாக இருக்கும் விஜய் சேதுபதியை பார்த்து ஆச்சர்யமடைந்துள்ளனர் ரசிகர்கள். விஜய்யின் மாஸ்டர் மற்றும் கமல்ஹாசனின் விக்ரம் உள்ளிட்ட படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் ஒல்லியாக இருந்தவர், பின்னாளில் எடை அதிகரித்து சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் காணப்பட்டார். எடை அதிகரித்ததால் இனி அவர் வில்லனாக தான் நடிக்க முடியும் என்று பேச்சுகள் எழுந்தன. இந்நிலையில் தற்போது தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான தோற்றத்தில் புதிய படத்தை வெளியிட்டுள்ளார் விஜய் சேதுபதி. தற்போது அந்தப் படம் இணையத்தில் லைக்ஸை குவித்து வருகிறது.