மாஸ்டர் படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.
2/ 5
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வர வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போயுள்ளது.
3/ 5
மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனாலும் அவ்வப்போது சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் கொடூர வில்லனாக பவானி என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடித்திருப்பது அனைவரும் அறிந்ததே.
4/ 5
விஜய் சேதுபதியின் சிறுவயது கதாபாத்திரத்தில் மாஸ்டர் மகேந்திரன் நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரத்துக்கும் சேர்த்து விஜய் சேதுபதியே டப்பிங் பேசியதாக கூறப்படுகிறது. தனது சிறுவயது குரலில் வித்தியாசம் தெரியக் கூடாது என்பதற்காகவே இதை அவர் செய்துள்ளாராம்.
5/ 5
லாக்டவுன் காலத்திலும் பிஸியாக இருக்கும் விஜய் சேதுபதி, தாடி மீசையுடன் புதிய லுக்கில் இருக்கும் புகைப்படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.