இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக 14 வருடங்களுக்கு பிறகு திரிஷா நடிக்கிறார். இதில் ஹைலைட் என்னவென்றால் விஜய்க்கு மட்டுமல்ல, திரிஷாவுக்கும் இது 67வது படமாம். மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
சமீபத்தில் வெளியான தளபதி 67 பட பூஜை வீடியோவில் நடிகர் மரியம் ஜார்ஜ் இடம்பெற்றிருந்தார். இவர் கைதி படத்தில் நெப்போலியன் என்ற போலீஸ் கான்ஸ்டபிளாக கலக்கியிருப்பார். அதே போல விக்ரம் படத்தல் ஏஜென்ட் டீனாவாக கலக்கிய வசந்தி சமீபத்தில் காஷ்மீர் சென்றுள்ள படக்குழுவில் இடம்பிடித்திருந்தார். தளபதி 67ல் 'கைதி' நெப்போலியனும் 'விக்ரம்' ஏஜென்ட் டீனாவும் இடம்பிடித்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
இந்நிலையில் லியோ படத்தின் வசனகர்த்தா மற்றும் திரைக்கதை ஆசிரியர் ரத்னகுமார் போட்ட ஒரு ட்வீட் பல யூகங்களை கிளப்பியுள்ளது. அவர் கையில் ஒற்றைக்கண்ணாடியை வைத்துக்கொண்டு இறப்பு பற்றி பேசாதே எனக் குறிப்பிட்டுள்ளார். அந்தக்கண்ணாடி வேறு எதுவுமில்லை. விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் லுக் தான். அப்படத்திந்தான் ஒரு பக்கம் உடைந்த கண்ணாடியுடன் விஜய் சேது பதி சந்தானமாக நடித்திருப்பார்.