பாகுபலி 2 படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் சாஹோ, ராதே ஷ்யாம் படங்கள் தோல்வியில் முடிந்தன. இதனால் அடுத்து கே.ஜி.எஃப்.2 இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகவுள்ள சலார் படத்தின் மீது பிரபாஸ் அதிக நம்பிக்கை வைத்துள்ளார். இந்நிலையில், அர்ஜுன் ரெட்டி இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் உருவாகும் ‘ஸ்பிரிட்’ என்ற படத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ளார்.   ஸ்பிரிட் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் ஆகியுள்ளார். ராஷ்மிகா தற்போது விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தில் இடம்பெற்றுள்ளார். கடந்த ஆண்டு தெலுங்கில் மெகா ஹிட்டான புஷ்பா படத்தில் ராஷ்மிகா ஹீரோயினாக நடித்திருந்தார். இந்தாண்டு வரவுள்ள புஷ்பா 2 படத்திலும் ராஷ்மிகா இடம்பெற்றுள்ளார். ராஷ்மிகா நடிக்கும் பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்று விடுவதால் அவரை தங்களது படத்தில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.