விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'.
2/ 7
நானும் ரவுடி தான் படத்திற்குப் பிறகு மீண்டும் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா கூட்டணி இந்தப் படத்தில் இணைந்திருக்கிறது. இந்த முறை இவர்களுடன் புதிதாக சமந்தாவு இணைந்திருக்கிறார்.
3/ 7
படம் இன்று வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
4/ 7
இதற்கிடையே காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் பிகில் படத்தை கிண்டல் செய்திருப்பதாக பேச்சுகள் எழுந்துள்ளன.
5/ 7
அதாவது பிகில் படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட அனிதா, தனது அறையில் அடைந்துக் கிடப்பார். அவரை ஊக்கப்படுத்தி வெளியுலகிற்கு மீண்டும் அழைத்து வரும் விதமாக, மிகவும் சீரியஸான வசனங்களை பேசுவார் விஜய்.
6/ 7
ரசிகர்களிடம் பலத்த கைத்தட்டல் பெற்ற அந்த காட்சி காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் ரீ கிரியேட் செய்யப்பட்டுள்ளது. அதில் விஜய் பேசிய வசனத்தை ரெடின் கிங்ஸ்லி பேசியுள்ளார்.
7/ 7
இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் இணையத்தில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.