காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றி, நயன்தாராவுடன் கல்யாணம், இரட்டை ஆண் குழந்தைகளுக்கு அப்பாவானது என கடந்த வருடம் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு சிறப்பான ஆண்டாக அமைந்திருக்கிறது.
2/ 6
மேலும் அவர் அடுத்ததாக அஜித் குமாரை வைத்து இயக்கவிருக்கும் ஏகே 62 படத்தின் அறிவிப்பும் கடந்த ஆண்டு தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
3/ 6
லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் ஏகே 62 படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதற்கான முன் கட்ட தயாரிப்பு பணிகளில் அவர் ஈடுபட்டுவருகிறார்.
4/ 6
உரிய சட்ட விதிகளை பின்பற்றாமல் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றதாக சர்ச்சை உருவானது. பின்னர் தாங்கள் விதிமுறைகளை மீறி குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்பதை நிரூபித்தனர்.
5/ 6
இந்த நிலையில் சபரி மலைக்கு மாலை அணிந்துள்ள விக்னேஷ் சிவன், ஐயப்பனை தரிசிக்க கேரளா சென்றுள்ளார். இதனையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் மலையாளத்தில் எழுதப்பட்ட ஊரின் பெயர் பலகை முன் எடுத்துக்கொண்ட படத்தை அவர் பகிர்ந்து சபரிமலை செல்வதாக தெரிவித்துள்ளார்.
6/ 6
அவரது பதிவில், சுவாமியே சரணம் ஐயப்பா, உன்னை காண ஆவலுடன் வருகிறேன் என குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவரது வேண்டுதல் பழிக்க வேண்டும் என பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.